Thursday, May 14, 2015

10 ஆயிரம் கோடி ஊழல், சென்னையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் 12 பேரின் போட்டோக்களுடன் பரபரப்பான போஸ்டர்

ரூ.10 ஆயிரம் கோடி ஊழல் என சென்னையில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் 12 பேரின் போட்டோக்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பொதுப்பணித்துறையில் டெண்டர் விட்டு செய்யப்படும் அரசு பணிகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் 45 சதவீதம் வரை கமிஷன் பெறுவதாகவும், இப்படி லஞ்சம் பெறும் அதிகாரிகளின் பட்டியலை வெளியிடப்போவதாகவும் சென்னையில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் ‘பிளக்ஸ் பேனர்’ வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர், அதன் தலைவர் குணமணி தலைமையில் சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீஸ் அலுவலகத்தில் 10 ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி புகார் மனு கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை காண்டிராக்டர்களும் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளின் பெயர்களை வெளியிடப்போவதாகவும் போஸ்டர் ஒட்டினர்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் 12 பேர் மீதும் ஊழல் புகார்கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பேனர்களில் '10 ஆயிரம் கோடி ஊழலில் சிக்கிய 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 12 பேரின் பெயர்கள் மற்றும் போட்டோக்களும் அதில் இடம் பெற்றுஉள்ளது. அரசு நிர்வாகங்களில் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மீது ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் புகார் கூறப்பட்டிருப்பது கடும்அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பான பேனர்கள் படம் பிடிக்கப்பட்டு வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. 

No comments:

Post a Comment