Sunday, May 31, 2015

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 31 வரை நீட்டித்தது வருமான வரித்துறை

வருமான வரி கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 31 வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.அதே வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் படிவங்களும் எளிமையாக்கப்பட்டுள்ளன.மேலும் வெளிநாடு சென்றதற்கான செலவு குறித்த தகவல்களை தாக்கல் செய்ய தேவையில்லை என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய படிவத்தில் அதிகமான தகவல்களைஅரசு பெற முயற்சிப்பதாக ஏற்கனவே பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.இந்நிலையில் தான் காலக்கெடுவை நீட்டித்து அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment