Wednesday, May 06, 2015

இலவச கட்டாய கல்வி திட்டத்துக்கான ரூ.97 கோடியை திருப்பி தர தமிழக அரசு கோரிக்கை

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி
திட்டத்துக்காக தமிழக அரசு செலவழித்த
ரூ.97 கோடியை உடனடியாக திருப்பி தர
வேண்டும்
என பிரதமருக்கு தமிழக
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எழுதிய
கடிதத்தில் கோரிக்கை
விடுத்துள்ளார்.பிரதமர் மோடிக்கு தமிழக
முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் எழுதிய
கடிதம்:மத்திய அரசு கொண்டு வந்த 14
வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 8ம்
வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி வழங்க
வகை செய்யும் கல்வி உரிமை சட்டத்தை
செயல்படுத்துவதில் தமிழகம்
முன்னிலையில் உள்ளது.
இந்த சட்டத்தின்படி ஏழை குழந்தைகளுக்கு
அருகாமையில் உள்ள அரசு உதவி பெறாத
தனியார் பள்ளிகளில் கட்டாயம் 25 சதவீதம் இட
ஒதுக்கீடு அளிக்க வேண்டும். இந்த
இடஒதுக்கீட்டையும் தமிழக அரசு தீவிரமாக
அமல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக
கடந்த 2013-14ம் ஆண்டில் 49864 குழந்தைகள்
பயன் அடைந்தனர். 2014-15ல் இது 86729 ஆக
உயர்ந்துள்ளது.
இதற்காக கடந்த 2013-14ல் தமிழக அரசு
ரூ.25.13 கோடி செலவிட்டது. 2014-15ல்
ரூ.71.91 கோடி செலவானது. இந்த
தொகையை திருப்பிதர பல முறை கடிதம்
எழுதியும் இதுவரை எந்த நடவடிக்கையும்
மேற்கொள்ளப்படவில்லை. இந்த சூழலில்
மத்திய அரசு சர்வ சிக்ஷ அபியான்
திட்டத்தில் திருத்தங்களை
அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 2014 முதல்
செலவிட்ட தொகையை மத்திய அரசு
திரும்ப கொடுக்கும். இதன் மூலம் கடந்த
ஆண்டுகளில் தமிழக அரசு செலவிட்ட
தொகையை மத்திய அரசிடம் பெற
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே
தமிழகம் பாதிக்கும் வகையில் சர்வ சிக்ஷ
அபியான் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள
திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும்.
தமிழக அரசு செலவிட்ட ரூ.97.04 கோடியை
உடனடியாக வழங்க மத்திய மனித
வளத்துறையை பிரதமர் வலியுறுத்த
வேண்டும் என்று அதில்
குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment