Thursday, June 11, 2015

எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை: ஜூன் 19 முதல் கலந்தாய்வு

  தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் நிகழ் கல்வியாண்டில் (2015-16) மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.



         ஜூ19-ஆம் தேதி தொடங்கி வரும் 25-ஆம் தேதி வரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.

சிறப்புப் பிரிவினருக்கு...: விளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு வரும் 19-ஆம் தேதி எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெறும். தொடர்ந்து ஜூன் 20-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினர் உள்பட அனைத்து சமுதாயப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும்.


வரும் 25-ஆம் தேதியன்று முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடையும்.
2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள்: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,257 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.

மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். சென்னை தாகூர், கோவை-பி.எஸ்.ஜி., கோவை-கற்பகம், ஈரோடு ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரி, திருச்சி அருகே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி (எஸ்ஆர்எம் குழுமம்), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள ஸ்ரீமூகாம்பிகை மருத்துவக் கல்லூரி, மதுராந்தகம் கற்பக விநாயகா, உள்ளிட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.

சென்னை இஎஸ்ஐ நிலை என்ன?: உயர் நீதிமன்றத்தின் எதிர்கால இறுதித் தீர்ப்புக்கு மாணவர் சேர்க்கை கட்டுப்பட வேண்டும் என்பதால், ஏற்கெனவே சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சென்னை கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி முதல் கட்ட கலந்தாய்வில் இடம்பெறாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில்...
எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 19-ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு கடந்த பல ஆண்டுகளாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெற்று வந்தது. முதன்முறையாக இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள நவீன வசதிகளைக் கொண்ட இரண்டு கூட்ட அரங்குகளைக் கருத்தில் கொண்டு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வை இனி அங்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி 

No comments:

Post a Comment