Thursday, June 04, 2015

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு: பள்ளிக்கல்வித் துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் ஆய்வக உதவியாளர் தேர்வு தொடர்பான அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு சென்னைஉயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த முத்துசாமி உட்பட 4 பேர் தாக்கல் செய்துள்ள மனு, நீதிபதிஹரி பரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது,
தகுதி பட்டியலில் நேர்முகத் தேர்வு மதிப்பெண்ணை கணக்கீடு செய்வது போல எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கீடு செய்யாதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.வரும் 8 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் மற்றும் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
முத்துசாமி உட்பட4 பேர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு ஆணையை வெளியிட்டதற்கு முன்னதாகவே, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தங்களது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய அறிவிப்பு ஆணையில் குளறுபடி இருப்பதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்

No comments:

Post a Comment