Friday, July 17, 2015

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்வு பெற்றோர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் அரசு பள்ளிகளில் மட்டும் மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட்டனர்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமிப்பதில்லை என, புகார் எழுந்தது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி்தேர்வில் தேர்வு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பணியிடம் ஒப்புதல் கிடைக்கும் வரை காலியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவு.

No comments:

Post a Comment