Thursday, April 30, 2015
ஜூன் 1-ந்தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும்
Wednesday, April 29, 2015
மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க கல்வித்துறை உத்தரவு
வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நம் கல்வி... நம் உரிமை!- ஆசிரியர்கள் அன்றும்... இன்றும்... என்றும்!
விடுதலைக்குப் பின்னர் நெடுங்காலம்
வரை கல்வி அளிக்கும் பொறுப்பை
அரசு ஏற்றது கிடையாது.
Tuesday, April 28, 2015
பாடநூல் விற்பனை மையம் மூடல்: புத்தக தட்டுப்பாடு எதிரொலி
ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் தேர்வு தாமதம்: டி.ஆர்.பி., அலுவலகம் முன் தேர்வர்கள் முற்றுகை
அலுவலகத்தை, பட்டயப் படிப்பு
முடித்தவர்கள் முற்றுகையிட்டனர்.
கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியல் விவகாரம்: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்
உத்தரவிடப்பட்டுள்ளது.
Monday, April 27, 2015
பேராசிரியர், விரிவுரையாளர் பணிக்கு வயது வரம்பு அதிகரிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்
Saturday, April 25, 2015
தமிழ் வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு
பணிக்கு முதுகலை பட்டத்தை தமிழ்
வழியில்படித்திருந்தால் மட்டுமே
பி.இ.: மே 6-இல் விண்ணப்பம்: 11-இல் எம்.பி.பி.எஸ்.
மாணவர்களைச் சேர்க்க மே 6-ஆம் தேதி
முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று அண்ணா
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிகள் இணையதள மதிப்பெண் நகலை பெறலாம்
செய்யப்படும் மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்'
பங்குச் சந்தையில் 5 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி பி.எப். நிதியை சூறையாடுகிறது அரசு
30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?
Friday, April 24, 2015
தாமதமாகிறது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: கோடை விடுமுறைக்குள் முடிக்கப்படுமா?
அடிப்படையில் ஆசிரியர்களுக்கான பொது
மாறுதல் கலந்தாய்வு, அதை தொடர்ந்து
பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது.
Thursday, April 23, 2015
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதியும் வெளியிடப்படும்
முடிவுகள் வெளியாகும் தேதியை
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா
இன்று வெளியிட்டார்.
இன்று உலக புத்தக தினம்- வாசிப்போம்! அதுவே நம் சுவாசம்! என யோசிப்போம்!
மக்கள் மத்தியில் வளர்க்கும் வகையில்
ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக
கொண்டாடப்படுகிறது.
Wednesday, April 22, 2015
பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை
மேல்நிலைப் பள்ளிகளுக்கும்நடப்பு கல்வி
ஆண்டுக்கான இறுதி வகுப்புகள் இன்று
(புதன்கிழமை) முடிவடைகின்றன.
அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம்
பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக
பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!
அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
Tuesday, April 21, 2015
உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ் வழக்குகள் இறுதிவிசாரணை ஜூலை 14 !
புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை: மத்திய கல்வியியல் கவுன்சில் கடும் எச்சரிக்கை!!
'தமிழகத்தில், புதிய பி.எட்.,
கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை'
என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர்
கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது.
தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை
சார்பில், மூன்று நாள் சர்வதேச மாநாடு,
சென்னையில் நேற்று துவங்கியது.
பல்கலை, தொழிற்துறை மற்றும் சமூகம்
இடையிலான இடைவெளியைக்
குறைத்து, கல்வியை மேம்படுத்துவது
எப்படி என்ற மையக் கருத்துடன் இந்த
மாநாடு நடக்கிறது.
கல்வியியல் கவுன்சில்:
ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணை
வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் நடந்த
நிகழ்ச்சியில், தேசிய ஆசிரியர் கல்வியியல்
கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா,
பல்கலை மானியக்குழுவான
யு.ஜி.சி.,யின் துணைத் தலைவர்
தேவராஜ், உயர்கல்வித் துறை முதன்மை
செயலர் அபூர்வா, ஆசிரியர் கல்வியியல்
பல்கலை பதிவாளர் கலைச்செல்வன், தென்
ஆப்ரிக்காவின் வடமேற்கு பல்கலை
பேராசிரியர் வோல் ஹ்யூட்டர்,
சின்சினாட்டி பல்கலை இணை முதல்வர்
பியூஷ் சாமி, ஆசிரியர் பல்கலை
தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர்
மணிவண்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சந்தோஷ் பாண்டா
பேசியதாவது: ஆசிரியர் கல்வியியல்
பி.எட்., படிப்புக்கான, 2014ம் ஆண்டு புதிய
விதிமுறைகள், நாடு முழுவதும், வரும்
கல்வியாண்டில், ஜூலை முதல்
அமலாகிறது. கல்வியில், தமிழகம்
முன்னோடி மாநிலமாக உள்ளதால், இந்த
விதிமுறைகளை அமல்படுத்த முன்வர
வேண்டும். தமிழகத்தில் அதிக அளவில்
பி.எட்., கல்லூரிகளில் முதலீடு
செய்கின்றனர். அதிக முதலீடு இருந்தால்,
வேறு துறைகளில் அதை
பயன்படுத்துங்கள்; கல்வியை வணிகமாகக்
கருத வேண்டாம். இவ்வாறு, அவர்
பேசினார்.
தரமற்ற கல்லூரிகள் அதிகம்:
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டிலேயே, தமிழகத்தில் தான் அதிக
பி.எட்., கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில்
இனி புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு
மத்திய கல்வியல் கவுன்சில் அனுமதி
அளிக்காது. தரமற்ற கல்லூரிகள்
அதிகமாவதைத் தடுக்கவும், தரமான
கல்லூரிகளை உருவாக்கவும் இந்த
நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புதிய
கல்லூரி தேவை என்று, மாநில ஆசிரியர்
கல்வியியல் பல்கலையில், தடையில்லா
சான்று அளித்தால் மட்டுமே, அனுமதி
குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர்
கூறினார்.
யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜ்
நிருபர்களிடம் கூறுகையில், ''நாடு
முழுவதும், 155 கல்லூரிகள், தன்னாட்சி
அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளன.
தமிழகத்தில், 20 கல்லூரிகளுக்கு
தன்னாட்சி அதிகாரம் கிடைக்க
வாய்ப்புள்ளது. அதற்காக தனி குழு
அமைக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
30 ஆம் தேதிக்குள் முடிக்க திட்டம்: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது
பத்தாம் வகுப்பு விடைத்தாள்
திருத்தும் பணி நேற்று தொடங்கியது.
இம்மாதம் 30ம் தேதிக்குள் திருத்தி முடிக்க
தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம்
வகுப்புத் தேர்வு கடந்த மாதம் 19ம் தேதி
தொடங்கியது.
இந்த தேர்வில் தமிழகம்.
புதுச்சேரியை சேர்ந்த 11827 பள்ளிகளை
சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ,
மாணவியர் தேர்வு எழுதினர். அந்த
விடைத்தாள்கள் அந்தந்த தேர்வு
மையங்களில் தொகுக்கப்பட்டு 70
திருத்தும் மையங்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டன. நேற்று 70 திருத்தும்
மையங்களிலும் முழுவீச்சில் விடைத்தாள்
திருத்தும் பணிகள் தொடங்கியது.
இதற்காக ஒவ்வொரு தேர்வு மையத்திலும்
300 முதல் 400 ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, மதுரை,
திருச்சி, உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள
மையங்களில் மட்டும் ஒரு மையத்துக்கு 500
ஆசிரியர்கள் என மொத்தம் தமிழகம்
முழுவதும் 45 ஆயிரம் ஆசிரியர்கள்
விடைத்தாள் திருத்தும் பணியில்
ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை 8 மணி
அளவில் முதன்மைத் தேர்வர்கள்
விடைத்தாள்கள் திருத்தினர். அவர்களை
தொடர்ந்து 9 மணி அளவில் அனைத்து பாட
ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தினர்.
ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா 10
விடைத்தாள்கள் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு நாளும் திருத்தி முடித்த
பிறகு அனைத்து விடைத்தாள்களின்
மதிபெண்களும் பட்டியலிடப்பட்டு
உடனுக்குடன் கணினி மூலம் சென்னை
கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா
சென்டருக்கு அனுப்பி வைக்கப்படும்.
விடைத்தாள் திருத்தும் பணி 27ம்
தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று
தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா
15 தாள்கள் வீதம் திருத்த கொடுக்க
வேண்டும் என்றும் தேர்வுத்துறை
உத்தரவிட்டுள்ளது. இருப்பினும்
மொழிப்பாடத் தேர்வுக்கான
விடைத்தாள்கள் இரு மடங்காக உள்ளதால்
ஏப்ரல் 30ம் தேதி வரை திருத்தும் பணி
நடக்கும் என்று ஆசிரியர்கள்
தெரிவிக்கின்றனர். இந்த பணி முடிந்து 70
மையங்களில் இருந்தும் மதிப்பெண்கள்
டேட்டா சென்டருக்கு வந்து சேர்ந்ததும்
மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்
தயாரிக்கும் பணி தொடங்கும்.
இதையடுத்து மே மாதம் 2வது வாரத்தில்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை
வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் கடந்த
மாதம் 17ம் தேதி தொடங்கியது. மொத்தம் 8
லட்சத்து 45 ஆயிரம் மாணவ மாணவியரின்
விடைத்தாள்கள் 65 மையங்களிலும்
திருத்தப்பட்டது. இதற்காக சுமார் 40 ஆயிரம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
திருத்தப்பட்ட விடைத்தாள்களின்
மதிப்பெண்கள் சென்னை கோட்டூர்புரம்
டேட்டா சென்டர் வந்து சேர்ந்தது. தேர்வு
முடிவுகளை வெளியிடுவதற்கு
வசதியாக ரேங்க் பட்டியல் தயாரிப்பும்,
மதிப்பெண் பட்டியல்களும்
தயாரிக்கப்படுகின்றன. தேர்வு முடிவுகள்
மே 10ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்
என்ற இலக்கு வைத்து பணிகள் நடக்கிறது.
அதற்கு அடுத்த சில நாட்களில் அனைத்து
பள்ளிகள் மூலம் மதிப்பெண் பட்டியல்கள்
வழங்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது.
வரும் கல்வி ஆண்டிலிருந்து இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்பு
பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களை வரும்
கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு
ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என,
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில்
(என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா
கூறினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்
அடிப்படையிலும், மத்திய அரசின்
அனுமதியுடனும் இந்தப் புதிய
வழிகாட்டுதல் கொண்டு வரப்பட்டுள்ளது;
எனவே, எவ்விதமான தடைகள் வந்தாலும்
புதிய வழிகாட்டுதல்
நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர்
கூறினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் -
கல்வி-ஆராய்ச்சிக்கும் அதனால் சமூகத்தில்
ஏற்படக் கூடிய தாக்கத்துக்கும் இடையே
உள்ள இடைவெளியைப் போக்கும்
வகையில் பல்கலைக்கழகங்கள், தொழில்
நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள்
இடையே அறிவு பறிமாற்ற கூட்டுறவை
ஏற்படுத்துதல் - என்ற தலைப்பிலான
மூன்று நாள் சர்வேதச மாநாடு தொடக்க
விழா சென்னையில் திங்கள்கிழமை
நடைபெற்றது.
இதில் சந்தோஷ் பாண்டா பேசியது:
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்
நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்
கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய
வழிகாட்டுதலை (என்.சி.டி.இ.
வழிகாட்டுதல் 2014) என்.சி.டி.இ.
கொண்டுவந்துள்ளது. இதற்கு மத்திய
அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
வருகிற ஜூலை மாதம் முதல் இந்த புதிய
வழிகாட்டுதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இந்த வழிகாட்டுதலின் படி பி.எட்., எம்.எட்.
படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு
ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
இதற்கு தமிழகம் உள்ளிட்ட ஒருசில
மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வருகிற ஜூலை முதல் புதிய
வழிகாட்டுதல் நடைமுறைக்குக்
கொண்டுவரப்படும். பி.எட்., எம்.எட். படிப்புக்
காலங்களும் இரண்டு ஆண்டுகளாக
உயர்த்தப்படும்.
ஒருவேளை இதற்கு எதிராக தீர்ப்புகள்
வருமானால், அதை எதிர்த்து என்.சி.டி.இ.
போராடும் என்றார்.
யுஜிசி துணைத் தலைவர் ஹெச்.
தேவராஜ்: நாட்டின் முன்னேற்றத்துக்கு
ஆசிரியரின் பங்கு மிகப் பெரியது. இதை
உணர்ந்துதான் ஆசிரியர் கல்வியை
மேம்படுத்துவதற்கான பல்வேறு
நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து
வருகிறது.
திறன் மிக்க 1000 ஆசிரியர்களை
உருவாக்கி நாடு முழுவதும் உள்ள
பல்கலைக்கழகங்களுக்கு வழங்குவதற்காக
ரூ.600 கோடியில் இரண்டு ஆசிரியர் கல்வி
மையங்கள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.
காக்கிநாடாவிலும், வாராணசியிலும்
இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதுவரை 220 ஆசிரியர்களுக்கு
பயிற்சிளிக்கப்பட்டு, பல்வேறு
பல்கலைக்கழகங்களில்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைக் காலமாக தொழில்நுட்பம் அபார
வளர்ச்சி பெற்று வருகிறது. யுஜிசி
அண்மையில் இரண்டு இணைய பாடத்
தொகுப்புத் திட்டங்களை அறிமுகம்
செய்தது.
அதாவது அனைத்து 77 இளநிலை
படிப்புகள், அனைத்து முதுநிலை பட்டப்
படிப்புகளின் பாடங்களும் யுஜிசி
இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இதை
இலவசமாக மாணவர்கள் பயன்படுத்த
முடியும்.
இதுபோல, பல்வேறு தகவல்கள்
இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
இதனால் ஆசிரியரே தேவையில்லை என்ற
நிலை இன்றைக்கு
உருவாகியிருக்கிறது.
இருந்தபோதும், நேரடியாக கற்பித்தலை
வழங்குவதும், குறிப்பிட்ட பாடத்துக்கு
தொடர்புடைய பிற கருத்துகளை
தெளிவுபடுத்தியும், சந்தேகங்களுக்கு
நேரடி பதிலளிக்கவும் ஓர் ஆசிரியரால்
மட்டுமே முடியும்.
எனவே, ஆசிரியர்கள் கணினி உள்ளிட்ட நவீன
தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள
வேண்டும் என்பதோடு, ஒரு பாடத்
துறையோடு நின்று விடாமல் பல்வேறு
துறை அறிவையும் பெற்றிருப்பது
அவசியம் என்றார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழக துணைவேந்தர்
ஜி.விஸ்வநாதன் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழக உயர் கல்வித் துறை செயலர்
அபூர்வா, தென்னாப்பிரிக்க வடமேற்கு
பல்கலைக்கழக பேராசிரியர்
சி.சி.வோல்ஹூட்டர், அமெரிக்காவின்
பிரிட்ஜ்வாட்டர் கல்வியியல் கல்லூரி
முதல்வர் ஜோன்னே நியூ கோம்,
அமெரிக்காவின்
சின்சினாட்டி பல்கலைக்கழக கல்வியியல்
கல்லூரி இணை முதல்வர் பியூஷ்
சுவாமி உள்ளிட்ட பலர் மாநாட்டில்
பங்கேற்றனர்.
1175 புதிய வகுப்பறைகள் ஜூனில் திறப்பு: எஸ்.எஸ்.ஏ., இணை இயக்குனர் தகவல்
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி
திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 1175
கூடுதல் வகுப்பறைகளை ஜூனில் திறக்க
நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என
அத்திட்ட இணை இயக்குனர்
நாகராஜமுருகன் தெரிவித்தார்.
மதுரை, தேனி உட்பட எட்டு
மாவட்டங்களின் எஸ்.எஸ்.ஏ., திட்ட
பொறியாளர், ஒருங்கிணைப்பாளர்கள்
ஆய்வுக் கூட்டம் மதுரை முதன்மை கல்வி
அலுவலகத்தில் நடந்தது. மாநிலத் திட்ட
பொறியாளர் சுதாகரன்,
ஒருங்கிணைப்பாளர் காயத்ரி பங்கேற்றனர்.
இதில் இணை இயக்குனர் பேசியதாவது:
மாநிலத்தில் இந்தாண்டு 128 புதிய
தொடக்கப் பள்ளிகள், 42 தரம் உயர்த்தப்பட்ட
நடுநிலைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன.
இவை உட்பட கூடுதல் வகுப்பறைகள்
தேவை என்ற அடிப்படையில், 2014-15ல்
ரூ.64.62 கோடியில் 1175 புதிய கூடுதல்
வகுப்பறைகள் கட்ட எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில்
ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 50 சதவீத
பணிகள் முடிவுற்றன. மீதமுள்ள பணிகளை
ஜூனிற்குள் முடிக்க நடவடிக்கை
எடுக்கப்படுகிறது. கூடுதல் வகுப்பறை
கட்டுமான பணிகளில் ஏதேனும் சிக்கல்
இருந்தால் அதிகாரிகள் கவனத்திற்கு
கொண்டுசென்று முடிக்க வேண்டும்.
இதுதொடர்பாக திட்ட இயக்குனர்
பூஜாகுல்கர்னி உத்தரவின்படி கோவை,
விழுப்புரம் மண்டலங்களில் ஆய்வு நடந்தது.
இன்று (ஏப்.,21) திருச்சி மண்டலத்தில்
ஆய்வுக் கூட்டம் நடக்கிறது என்றார்.
Monday, April 20, 2015
தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை
அதிகரிக்க நடப்பு கல்வியாண்டு
துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப்
பள்ளிகளில் தலைமை ஆசிரியர்
காலியிடங்களை நிரப்ப பள்ளிக்
கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவையில், புதிதாக மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படுகிறது
கோவை, தர்மபுரி, பெரம்பலூரில்,
புதிதாக மாவட்ட கல்வியியல்
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
அமைக்க,
அரசு பேச்சு நடத்தாவிட்டால் 'ஸ்டிரைக்':'ஜாக்டோ' அறிவிப்பு
நடத்தாவிட்டால், ஜூன் முதல் வேலைநிறுத்தம் மற்றும் மறியல்
போராட்டங்கள் நடத்தப்படும்'
தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை
அதிகரிக்க நடப்பு கல்வியாண்டு
துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப்
பள்ளிகளில் தலைமை ஆசிரியர்
காலியிடங்களை நிரப்ப பள்ளிக்
கல்வித்துறை நடவடிக்கை
எடுத்துள்ளது.
அரசு உயர்நிலைப் பள்ளிகளில்
தலைமை ஆசிரியர்கள் 2012 வரையிலும்,
முதுகலை ஆசிரியர்கள் 2009
வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதி
அடிப்படையில் அரசு மேல்
நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக
பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.
இதற்கான விபரங்களை
பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே
சேகரித்து அனுப்பியது.
இப்பதவி உயர்வு பட்டியலில்
குளறுபடிகளை தவிர்க்க, இறுதிக்கட்ட
ஆய்வு மேற்கொண்டு மீண்டும் பதவி
உயர்வு பட்டியல் ஒன்றை அனுப்பி
வைக்க, பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. இதற்காக விடுபட்ட
விபரங்களை நேரில் வரவழைத்து
கல்வித்துறை ஊழியர்கள்
சேகரிக்கின்றனர்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், "நடப்பு
கல்வியாண்டில் ஜூனில் பள்ளிகள்
திறக்கும் நிலையில், மே மாத
இறுதிக்குள் பதவி உயர்வு பட்டியல்
வெளியிடப்பட்டு, காலி பணியிடங்கள்
நிரப்பும் திட்டம் உள்ளது. இதற்கான
கவுன்சிலிங் 2015 மே இறுதியில் நடத்த
கல்வித்துறை திட்டமிட்டுள்ளது"
என்றார்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உண்ணாவிரதம்
கூட்டு நடவடிக்கை குழுவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்
உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
Sunday, April 19, 2015
+2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
Saturday, April 18, 2015
பள்ளி திறக்கும் நாளில் புத்தகம்! ஏற்பாடுகள் தீவிரம் : பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முடிவு
நாளில் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச பொருட்களை வழங்க வேண்டும்
அனைத்துப் பள்ளிகளிலும் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமதாஸ்
உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை
ஏற்படுத்தவும், போதிய எண்ணிக்கையில்
ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக
நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மாவட்ட வாரியாக நடக்கிறது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்
கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைதமிழகம் முழுவதும் மாவட்ட
தலைநகரங்களில் ஆசிரியர்கள்
உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
Friday, April 17, 2015
Thursday, April 16, 2015
புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு
எடுக்கவுள்ளது.
புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., முடிவு?
வழங்குவதில் சிக்கல் மற்றும் தகுதி
நிர்ணயகுழப்பம் போன்றவற்றால், புதிய
நியமனங்களை நிறுத்தி வைக்க,
மே மாதம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்
ஆண்டு ஆசிரியர்களுக்கு மே மாதம்
பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற
வாய்ப்பு உள்ளது.
Tuesday, April 14, 2015
ஆசிரியர்களுக்கு மே மாதம் பொது மாறுதல் கவுன்சிலிங் நடைபெற வாய்ப்பு
ஆண்டு ஆசிரியர்களுக்கு மே மாதம்
பொது மாறுதல்
1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு மே முதல் வாரத்தில் புத்தகங்கள் அனுப்பப்படும்
வகுப்பு வரை முதல் பருவத்துக்கான
புத்தகங்கள் மாவட்டங்களுக்கு மே மாதம்
முதல் வாரத்தில் அனுப்பப்பட உள்ளன.
10,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பும் பணி வரும் ஆகஸ்ட் மாதம் தொடக்கம்??
மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி
விசாரணையை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 21-ம்
தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 21
மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி
விசாரணையை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 21-ம்
தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
Monday, April 13, 2015
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 19ம் தேதி உண்ணாவிரதம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு
வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச
கோரிக்கையை வலியுறுத்தி
தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி
உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்
கல்வித்துறை போதிய ஒத்துழைப்பு தராததால் பணிகள் தொய்வு
கட்டமைப்பை மேம்படுத்த, கல்வித்துறை
போதிய ஒத்துழைப்பு தராததால்,
பணிகள் தொய்வடைந்துள்ளதாக, புகார்
எழுந்துள்ளது.
தமிழகத்தில் கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது
செயல்படுகிறது என மத்திய மனித வள
மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர்
ராம் சங்கர் கதேரியா தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் உள்ளது கல்வியாளர் வே.வசந்திதேவி அறிவுரை
சூழலில் அரசுப் பள்ளிகளை காப்பாற்ற
வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள்
கையில்தான் உள் ளது
Saturday, April 11, 2015
எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி 20-ல் தொடங்குகிறது: 40 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு
வருகிற 20-ம் தேதி தொடங்குகிறது.
Friday, April 10, 2015
Thursday, April 09, 2015
அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதி முடிவடைகிறது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும்
தேதியுடன் முடிவடைகின்றன.
உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: தேர்வானோர் பட்டியல் வெளியீடு!
வெளியிடப்பட்டுள்ளது.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் விவகாரம்: கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 13.04.2015ஆம் தேதி விசாரணை!
Wednesday, April 08, 2015
தனித் தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் விண்ணப்பிக்கலாம்
பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Tuesday, April 07, 2015
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்
ஓய்வூதியதாரர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2015 முதல் வழங்க இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் 25% குறைக்க வேண்டும்: கலாம் யோசனை
என்றால் தற்போதுள்ள பள்ளி, கல்லூரி
பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்க
வேண்டும்
மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில் 11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வு முடிவு இந்த வாரம் வெளியிடப்படும்
தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாத
இறுதிக்குள் வெளியாகும் என்று
டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு)
சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வானோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு
ஆசிரியர் தகுதித் தேர்வில் இந்த ஆண்டு
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கான புத்தகங்கள் இந்த வார இறுதிக்குள் முழுமையாக விநியோகம்!
சேர்ந்த மாணவர்களுக்கு வரும்
கல்வியாண்டுக்கான பிளஸ் 2 புத்தகங்கள்
விநியோகம் தொடங்கியுள்ளது.
10ம் வகுப்பு அறிவியல் தேர்வு 'ஈசி': 'சென்டம்' அதிகரிக்கும்!!
வினாத்தாள் எளிதாக இருந்ததால், இந்த
ஆண்டு நூற்றுக்கு நூறு, 'சென்டம்'
எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்க
வாய்ப்புள்ளது.
Monday, April 06, 2015
மழலையர் பள்ளி வழக்கு : பள்ளிக்கல்வி செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட
வழக்கில் பள்ளிக்கல்வி செயலர் நேரில்
ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 1 பாடத்திட்டம் 2016-17 ஆம் கல்வி ஆண்டிலும், பிளஸ் 2 பாடத்திட்டம் 2017-18 ஆம் கல்வி ஆண்டிலும் மாற்றி அமைக்கப்படுகிறது
ஆண்டிலும், பிளஸ் 2 பாடத்திட்டம் 2017-18
ஆம் கல்வி ஆண்டிலும் மாற்றி
அமைக்கப்படுகிறது.
Sunday, April 05, 2015
பிஎச்டி. முடித்திருந்தாலும் ‘SET’ அல்லது ‘NET’ தேர்வில் தேர்ச்சி கட்டாயம்!
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
2016-17ல் ப்ளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம்!
ஆண்டிலும் பிளஸ் 2 பாடத்திட்டம் அதற்கு
அடுத்த கல்வி ஆண்டிலும் மாற்றி
அமைக்கப்படுகிறது.
கணினி பயிற்றுநர்கள் 503 பேர் பணி நியமனம்
செய்யப்பட்ட 133 பேரைத் தவிர
மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு மூலம்
பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
Saturday, April 04, 2015
பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு தொடங்கியது
பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின்
கணக்கெடுப்பு சென்னையில்
தொடங்கியது. அனைவருக்கும் கல்வி
இயக்கம் சார்பில் மாற்றுத்திறன் உள்ள
குழந்தைகள் (5 முதல் 14 வயது வரை) பள்ளி
செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு
ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும்.
சென்னை மாவட்டத்தில் கூடுதல் முதன்மை கல்வி
அலுவலர்,உதவி திட்ட அலுவலர், மாவட்ட
ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள்,
ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்
மருத்துவ பயிற்றுனர்கள், தன்னார்வலர்கள் 150
பேர் பங்கேற்று கணக்கெடுக்கும் பணி
மேற்கொள்கின்றனர். அவர்கள் காலை 8
மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மாலை 4
மணி முதல் 6 மணி வரையிலும் வீடு வீடாக
சென்று மாற்று திறன்
கொண்டகுழந்தைகள் உள்ளனரா என
ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
கண்டறியப்படும் குழந்தைகள் மாநகராட்சி, அரசு
பள்ளிகளிலும் ஒவ்வொரு மண்டத்திலும்
உள்ள பள்ளிஆயத்த பயிற்சி மையம், வீட்டு வழிக்
கல்வி ஆகிய முறைகளில் பயிற்சி அளித்து அனைத்து
குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கப்பட உள்ளனர்.
மேலும் அவர்களுக்கு மருத்துவ முகாம், இயன்
மருத்துவ பயிற்சி, தொழில்சார் பயிற்சி,
உதவி உபகரணங்கள் அடையாள அட்டைகள்
வழங்கப்படும். அருகில் உள்ள தொண்டு
நிறுவனங்களும் இதில் பங்கேற்கலாம்.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள்
இருந்தால் அது தொடர்பாக 97888 58382
என்ற செல்போனில் சென்னை மாவட்ட
ஒருங்கிணைப்பாளரை தொடர்பு
கொள்ளலாம் என அனைவருக்கும் கல்வி
இயக்ககம் அறிவித்துள்ளது.
'ஆன் - லைனில்' விடைத்தாள் நகல்: கல்வி துறை அதிரடி திட்டம்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில்,
திருத்தப்பட்ட விடைத்தாள் நகல்களை, 'ஆன் - லைன்'
மூலம் பார்க்கும் வசதியை ஏற்படுத்த, பள்ளிக்கல்வித்
துறை முடிவு செய்து உள்ளது.பிளஸ் 2
பொதுத்தேர்வு, மார்ச் 5ல் துவங்கி, 31ம் தேதி
முடிந்தது; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்
19ம் தேதி துவங்கி நடந்து வருகிறது; வரும் 10ம் தேதி
முடிய உள்ளது.
இந்த ஆண்டு பொதுத்தேர்வில், பல
மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தேர்வு
முடிவு வெளியானதும், மேற்படிப்புக்காக,
கல்லூரிகளுக்கு உடனே விண்ணப்பிக்கும் வகையில்,
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க,
தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதனால்,
மாணவ, மாணவியர் மதிப்பெண்
சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டியதில்லை.
இன்னும் கூடுதல் வசதியாக,மாணவ,
மாணவியர் மறுகூட்டல் மற்றும் மறு ஆய்வுக்காக,
விடைத்தாள்களின் நகல் கேட்டு விண்ணப்பிக்கும்
போதும், அவர்களுக்கு தாமதமின்றி நகல் கிடைக்க
ஏற்பாடுசெய்யப்பட்டு உள்ளது. இதன்படி,
இந்த ஆண்டு, 'ஆன் - லைன்' மூலம், விடைத்தாள்
நகல் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.
இதற்கான முயற்சிகளை, தேர்வுத் துறை மற்றும்
தமிழ்நாடு பாடநூல் கழகம் இணைந்து
மேற்கொண்டு வருவதாக, கல்வித் துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.
கணினி ஆசிரியர் நியமனத்தில் குழப்பம்: இன்று கவுன்சிலிங் நடத்துவதில் சிக்கல்?
கணினி ஆசிரியர் நியமனத்தில், விதவை மற்றும்
கலப்பு திருமணம் செய்தோருக்கு முன்னுரிமை
அளிக்கும் வகையில், இறுதித் தேர்வை நிறுத்தி வைக்க, உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், இன்று, கணினி
ஆசிரியர் கவுன்சிலிங் நடப்பதில் சிக்கல்
எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள, 652
கணினி ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர்
தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,போட்டித் தேர்வு
நடத்தியது. இதில், ஏற்கனவே
தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த, 652 கணினி
ஆசிரியர்கள் தேர்வு பெறவில்லை. அவர்கள்,
தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி,
நீதிமன்றத்தில் பல வழக்குகளை
தொடர்ந்தனர். இதனால்,புதிய ஆசிரியர்
நியமனப் பணி, பல மாதமாக
இழுத்தடிக்கப்பட்டது. நீதிமன்ற வழக்குகளைத்
தாண்டி, 652 ஆசிரியர்களின் தேர்வு பட்டியலை
டி.ஆர்.பி., கடந்த, 20ம் தேதி வெளியிட்டது. ஏப்.,
4ம் தேதி (இன்று), மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலகங்களில் கவுன்சிலிங் நடக்கும் என்று
அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கும் புதிய சிக்கல்
எழுந்து உள்ளது.
கணினி ஆசிரியர் நியமனத்தில் விதவைகள் மற்றும்
கலப்பு மணம் புரிந்தோருக்கான முன்னுரிமை சரியாக
கடைபிடிக்கப்படவில்லை என, டான் பாஸ்கோ, கீதா,
திரிவேணி மற்றும் சோனியா ஆகியோர், சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர். இந்த வழக்கை, நீதிபதி
சசிதரன் விசாரித்து உத்தரவிட்டுள்ளார். அதில்,
'மனுதாரர்களுக்கு, நான்கு இடங்களை
காலியாக வைத்திருக்க வேண்டும். வரும், 6ம் தேதி,
இதுகுறித்து டி.ஆர்.பி., பதிலளிக்கும் வரை, இறுதித்
தேர்வை இடைக்காலமாக நிறுத்தி வைக்க வேண்டும்'
என, குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவால்,
இன்று, கவுன்சிலிங் நடக்குமா என்று, தேர்வானோர்
குழப்பமடைந்து உள்ளனர்.