பள்ளி வாரியாக, 10ம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள, மாணவர்களின் பெயர், விபரங்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி, நாளையுடன் முடிகிறது.
கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அடுத்தாண்டு மார்ச் மாதம் நடக்க உள்ள, 10ம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு கல்விமாவட்டத்திலும் பள்ளிவாரியாக, இத்தேர்வினை எழுதவுள்ள மாணவ, மாணவியரின் பெயர், தந்தைபெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம், எந்தெந்த பாடங்களில் அவர்கள் தேர்வெழுத உள்ளனர் உள்ளிட்ட விபரங்களை, கல்வித்துறை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, தேர்வுத்துறை உத்தரவிட்டது. முதன்மைக்கல்வி அதிகாரிகளின் கண்காணிப்பில், மாவட்டக்கல்வி அதிகாரிகள் மூலம், ஒவ்வொரு பள்ளிக்கும் தனி "ஐடி', "பாஸ்வேடு' கொடுக்கப்பட்டு, தலைமையாசிரியர்களின் மேற்பார்வையில் அவை பதிவேற்றம் செய்யப்பட்டன. இப்பணிகளை நாளையோடு (அக்.,28) முடிக்கவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவ,மாணவியரின் எண்ணிக்கை, பாடவாரியாக அவர்களுக்குத்தேவையான வினாத்தாள், விடைத்தாள்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பொருட்டும், தேர்வு முடிவு வெளியானபின் வழங்கப்படும், புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழில் அவர்களின் பெயர், பிறந்ததேதி பிழையின்றி இடம்பெறவுமே, இம்முறை கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment