Monday, November 25, 2013

அடுத்த மாதம் 1ம் தேதி குரூப் 2எழுத்து தேர்வு 1064பணியிடத்துக்கு 7.50 லட்சம்பேர் போட்டி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பணியில் 1,064 பேரை தேர்வு செய்ய கடந்த செப்டம்பர் 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
துணை வணிக வரி அதிகாரி&66  காலிபணியிடம், சார்பதிவாளர் (கிரேடு-2)- 2,
சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி&14,  தொழிலாளர் உதவி ஆய்வாளர்- 9, ஜூனியர்  எம்ப்ளாய்மென்ட் அதிகாரி& 3, உதவி தனி அலுவலர் 16, ஆடிட்
இன்ஸ்பெக்டர்-39, கைத்தறி ஆய்வாளர்& 147, கூட்டுறவு சங்கங்களின்
முதுநிலை ஆய்வாளர் 302, வருவாய் உதவியாளர் 370, உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் 71 உள்ளிட்ட 19 வகையான பதவிகள் இதில் இடம்
பெற்றுள்ளன.இத்தேர்வுக்கு சுமார் 7.50 லட்சம் பட்டதாரிகள்
போட்டி போட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது.

இதில், நிர்ணயிக்கப்பட்ட வயதை தாண்டியது மற்றும் அரசு பணியில் 5
ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர் என 1,055 பேரின் விண்ணப்பங்கள்
தள்ளுபடி செய்யப்பட்டன.இந்நிலையில், குருப் 2 எழுத்து தேர்வு வருகிற 1ம்
தேதி நடக்கிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 115 மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டம், சென்ட்ரல், வடக்கு, தெற்கு என்று பிரிக்கப்பட்டு எழுத்து தேர்வு நடக்கிறது.தேர்வு கூடத்திற்கு
அனுமதிக்கப்பட்ட பேனா தவிர, புத்தகம், குறிப்புகள், தனிதாள்கள், கணித மற்றும் வரைபடகருவிகள், மடக்கை அட்டவணை, பாடப்புத்தகங்கள், பொது குறிப்பு தாள்கள் ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது. மேலும் பேஜர், செல்போன், கால்குலேட்டர், மின்னணு கருவிகள், பதிவு கருவிகள் ஆகியவற்றை தனியாகவோ விண்ணப்பதாரரின் மோதிரம் அல்லது கைக்கடிகாரத்தின் இணைப்பாகவோ கொண்டு செல்ல கூடாது. சோதனையின்போது அவைகள் கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள்
தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களது விடைத்தாள் செல்லாதவையாக்கப்படும், தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கியும் வைக்கப்படுவார்கள்.தேர்வு கூடம் கண்காணிப்பு பணியிலும், தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் பறக்கும்படை பணியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 1000 பேருக்கு மேல் தேர்வு எழுதும் தேர்வு கூடங்கள் மற்றும் பதற்றமான, சட்டம் ஒழுங்கு பாதிப்பு அபாயம் உள்ள மையங்களில் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment