Monday, November 25, 2013

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்உண்ணாவிரதம்

மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற
பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம்  தலைமையில் ஆசிரியர்கள் சேப்பாக்கம்
விருந்தினர்  மாளிகை அருகே நேற்று உண்ணாவிரதம்
இருந்தனர்.
இதுகுறித்து மீனாட்சி சுந்தரம்  கூறியதாவது:மத்திய அரசுக்கு இணையாக
தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும்  ஊதியத்தை உயர்த்த வேண்டும். பழைய  ஓய்வு ஊதிய  திட்டத்தை ரத்து செய்துவிட்டு 2003க்கு பிறகு
பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஓய்வு ஊதிய  திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.  ஆசிரியர் தகுதித் தேர்வை கைவிட வேண்டும்.  மாதிரிப் பள்ளிகள்
தொடங்குவதை அரசு தடுத்து நிறுத்த  வேண்டும்.கல்வியை மீண்டும் மாநில
பட்டியலில் சேர்க்க வேண்டும். மாணவர்களின்  வருகைப்பதிவை வைத்து பள்ளிகளை மூடக்  கூடாது. அரசுப் பள்ளிகளுக்கு அருகில்  அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகள்  இயங்குவதை தடை செய்ய வேண்டும். ஆங்கில
வழி கல்வியை கைவிட்டு தமிழ் வழிக்கல்வியை செயல்படுத்த வேண்டும். காலியாக  உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப  வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்  வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

No comments:

Post a Comment