Monday, November 18, 2013

27ல்,அசாமில்,அகில இந்திய ஆசிரியர்கூட்டணி மாநாடு

""தரமான, இலவச கல்வி அளிக்க வலியுறுத்தி, அகில இந்திய ஆசிரியர்
கூட்டணியின், இரண்டு நாள் மாநாடு, அசாமில், நவ., 27 ம்தேதி முதல், நடைபெறும்,'' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப் சேவியர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின், 26 வது மாநாடு, அசாம், கவுகாத்தியில், நவ., 27,2 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அகில இந்திய பொது செயலாளர் ஈஸ்வரன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
"அனைவருக்கும் தரமான இலவச கல்வி அளிக்க வலியுறுத்தி,' மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கான வழி வகைகள், செயல்படுத்தும் விதம்
குறித்து, கருத்தரங்கில் விவாதிக்கப்படும். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங், மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜூ, என்.சி.ஆர்.டி., இயக்குனர் உட்பட கல்வித்துறையினர் பங்கேற்க உள்ளனர். ஆசிரியர் சமுதாயத்தின் இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், நவ., 25 முதல் 2 நாட்கள் பயிற்சிகள் நடைபெறும். தமிழகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாநாட்டில் பங்கேற்க உள்ளனர், என்றார். புரவலர் பொன்ராஜ், மாநில செயற்குழு பாண்டியராஜன் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment