Monday, December 09, 2013

தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ;இது ஜெ.,வின் 14 வது முறை களைஎடுப்பு!

ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் ஜெ., தமது அமைச்சரவையை இன்றும் மாற்றி அமைத்துள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சாத்தூர் தொகுதியை சேர்ந்த ஆர்.பி., உதயக்குமார் மீண்டும் அமைச்சர் பொறுப்பை பெற்றுள்ளார். முதல்வர் ஜெ., இன்று தமது அமைச்சரவையை மாற்றுவது 14 வது முறையாகும். தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: விளையாட்டு துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து கே.வி., ராமலிங்கம் விடுவிக்கப்படுகிறார். ஆர்.பி., உதயக்குமாருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது போல அமைச்சர்கள் கே.வி., ரமணா ( வணிகம்) , சம்பத் ( சுற்றுச்சூழல்) , தோப்பு வெங்கடாச்சலம் ( வருவாய்த்துறை ) ஆகியோரது பொறுப்புகளும்
மாற்றி அமைக்கப்படுகிறது. இதன்படி ரமணா வருவாய்துறை, சம்பத் வணிகதுறை, தோப்பு வெங்கடாச்சலம் சுற்றுச்சூழல் துறையை கவனிப்பர். புதிய அமைச்சர் உதயக்குமார் வரும் 11 ம் தேதி கவர்னர் மாளிகையில்
பதவிப்பிரமாணம் எடுத்து கொள்வார். ஆர்.பி.உதயக்குமார் யார் ? : சாத்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் அ.தி.மு.க., மாணவரணிக்கு மாநில செயலராக உள்ளார். சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவராகவும் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆட்சி அமைத்தவுடன் இவர் கடந்த முறை தகவல் தொழில்நுட்ப துறைக்கு அமைச்சராக இருந்தார். ஒராண்டுக்கு பின்னர் இவரிடம் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது. தற்போது இவருக்கு அமைச்சர்
பொறுப்பு சென்றுள்ளது.

No comments:

Post a Comment