Monday, December 09, 2013

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ–மாணவிகளுக்கு 21 புதிய விடுதிகள்:ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியர் இடை நிற்றல் இன்றி கல்வி கற்றிடவும், அவர்தம் சமூக மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும், நல்வாழ்விற்கும் பல்வேறு திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன்
செயல்படுத்தி வருகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டியில் 48
லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி; தாண்டிக்குடியில் 57 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி; திண்டுக்கல்லில் 66 லட்சத்து 78 ஆயிரம்
ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர்
விடுதி; பெரியகோட்டையில் 66 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி, சித்தையன் கோட்டையில் 66 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சீர்மரபினர் பள்ளி மாணவியர் விடுதி; ஒட்டன்சத்திரத்தில் 81 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர்
விடுதி; காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி; மதுராந்தகத்தில் 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி; தஞ்சாவூர் மாவட்டம், ஊரணிபுரத்தில் 54 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; திருப்பூந்துருத்தியில் 52 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர்
பள்ளி மாணவர் விடுதி; கடலூர் மாவட்டம், அண்ணா கிராமத்தில் 54
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; விருத்தாச்சலத்தில் 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி; கள்ளக்குறிச்சியில் 48 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி;
நாகப்பட்டினம் மாவட்டம், ஆயக்காரன்புலத்தில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர்
விடுதி; பெரம்பலூர் மாவட்டம், காரையில் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; நீலகிரி மாவட்டம், கூடலூரில் 60 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதி; ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 56 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சீர்மரபினர் கல்லூரி மாணவர் விடுதி; திருச்சிராப்பள்ளி மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 51 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; துவாக்குடியில் 56 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் விடுதி;
விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் 54 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவியர் விடுதி; திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 66 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதி; என மொத்தம் 12 கோடியே 90 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர் விடுதிகள், 9 மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவ மாணவியர் விடுதிகள் மற்றும் 2 சீர்மரபினர் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர் விடுதிகள், என மொத்தம் 22 விடுதிகளை முதல்–அமைச்சர்
ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார். இந்தப் புதிய விடுதி கட்டடங்கள் மூலம் 1200 மாணவ, மாணவியர் பயன்பெறுவார்கள். இந்த விடுதிகளில் கிரானைட் கற்களாலான சாப்பாட்டு மேஜை, அலமாரிகள், தீயணைப்புக்
கருவிகள், சமையல் அறையில் புகையை வெளியேற்றும் விசிறி, மின்சார
புகைபோக்கி, சூரிய ஒளி மூலம் நீரை சூடுபடுத்தும் கருவி, குளிர்சாதன
பெட்டி, சுற்றுச்சுவர், மேம்படுத்தப்பட்ட சமையல் கூடம் போன்ற வசதிகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் அருள்மொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் அஷோக் டோங்ரே, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment