Monday, December 30, 2013

நெட்' தேர்வு: 15 ஆயிரம் பேர் பங்கேற்பு

கல்லூரி மற்றும் பல்கலைகளில் உதவிப்பேராசிரியர்
பணியிடத்துக்கான, யு.ஜி.சி.,யின்
தேசிய தகுதித் தேர்வு (நெட்)
நேற்று நடந்தது.
கல்லூரி மற்றும்
பல்கலைகளில் உதவிப்பேராசிரியர்
பணிக்கு, யு.ஜி.சி., சார்பில், தேசிய
தகுதித் தேர்வு (நெட்)
நடத்தப்படுவது வழக்கம்.
ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும்
இதில், 2 ம் கட்ட நெட்
தேர்வு நேற்று நடந்தது. சென்னையில்
ஸ்டெல்லா மேரீஸ், ஜானகி எம்.ஜி.ஆர்.,
கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட, 13
மையங்களிலும், தமிழகத்தில், 47
மையங்களிலும் இந்த தேர்வு நடந்தது. 15
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வில்
கலந்து கொண்டனர்.
திருச்சி:
பல்கலை மானியக்குழு (யூ.ஜி.சி.,)
சார்பில், இளநிலை ஆராய்ச்சியாளர்,
விரிவுரையாளகளுக்கான தேசிய
தகுதித்தேர்வு (நெட்) நேற்று நடந்தது.
திருச்சி இந்திராகாந்தி மகளிர்
கல்லூரி, தேசிய
கல்லூரி மேல்நிலைப்பள்ளி,
ஹோலிகிராஸ் மகளிர் கல்லூரி, ஸ்ரீமத்
ஆண்டவன் கல்லூரி, ஆர்.சி.,
மேல்நிலைப்பள்ளி, காவேரி மெட்ரிக்.,
பள்ளி, காவேரி மகளிர் கல்லூரி,
தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்., பள்ளி,
இ.வி.ஆர்., கல்லூரி, ஜமால்
முகமது கல்லூரி ஆகிய, 10 மையங்களில்
தேர்வு நடந்தது.இந்த தேர்வு எழுத, 11
ஆயிரத்து, 122 பேர்
விண்ணப்பித்திருந்தனர். இதில், 2
ஆயிரத்து, 707 பேர் தேர்வு எழுத
வரவில்லை. 8, 415 பேர் தேர்வு எழுதினர்.
காலை, மதியம் என, இரண்டு தேர்வுகள்
நடந்தது.

No comments:

Post a Comment