Wednesday, December 18, 2013

பொதுத்தேர்வுக்கு 19 லட்சம் கேள்வித்தாள் அச்சடிப்பு

பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 3ல் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. இதற்காக, 19 லட்சம் கேள்வித்தாள் அச்சடிப்பு பணி, வெளிமாநிலத்தில், மும்முரமாக நடந்து வருகிறது.
பிப்ரவரி மத்தியில், அச்சகத்தில் இருந்து, நேரடியாக, கேள்வித்தாள்
கட்டுக்காப்பு மையத்திற்கு,
அவை வந்து சேரும். ஒவ்வொரு தேர்வு மையம் வாரியாக, ஒரு மையத்தில்,
எத்தனை தேர்வு அறைகள்
அமைக்கப்பட்டு உள்ளன என,
கணக்கீடு செய்யப்பட்டு, அதன்படி, அச்சகத்தில்
இருந்து, நேரடியாக,
தேர்வு அறை எண்ணிக்கை வாரியாக, தலா, 20
கேள்வித்தாள்கள் அடங்கிய கட்டுகள்
தயாரித்து, சீலிடப்பட்டு அனுப்பப்படும். இந்த
கேள்வித்தாள் கட்டுகள், மாவட்டங்களில்
அமைக்கப்பட உள்ள, கேள்வித்தாள்
கட்டுக்காப்பு மையத்திற்கு வந்து சேரும். பின்,
அந்த மையத்தில் இருந்து, தேர்வு நாள் காலை,
பள்ளிக்கு சென்றடையும். 2011 வரை,
கேள்வித்தாள் கட்டுகள், தேர்வுத்
துறை இயக்குனரகத்திற்கு வந்து, பின்,
மாவட்டங்களுக்கு சென்றன. கடந்த ஆண்டில்
இருந்து, நேரடியாக, அச்சகத்தில் இருந்து,
மாவட்டங்களுக்கு செல்லும் வகையில்,
நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே நடைமுறை,
இந்த ஆண்டும் இருக்கும் என,
துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மாணவர்
எண்ணிக்கை வாரியாக, கேள்வித்தாள்
அச்சிடப்பட்டு வருவதால், ஒரு கேள்வித்தாள்
கூட, கூடுதலாக வராது என, துறை வட்டாரங்கள்
தெரிவித்தன. இம்மாத இறுதியில்,
தேர்வெழுதும் மாணவர்களின்
எண்ணிக்கை விவரங்கள்,
அச்சகங்களுக்கு சென்றதும், குறிப்பிட்ட
எண்ணிக்கையுடன்,
அச்சடிப்பு பணி நிறுத்தப்படும். பிப்ரவரி, 15
தேதிக்கு பின், கேள்வித்தாள்கள் வர
ஆரம்பிக்கும் எனவும், துறை வட்டாரங்கள்
தெரிவித்தன. பிளஸ் 2 தேர்வுக்கு, 8.5 லட்சம்;
10ம் வகுப்பு தேர்வுக்கு, 10.5 லட்சம் என,
மொத்தம், 19 லட்சம் கேள்வித்தாள்கள்,
எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment