Tuesday, December 10, 2013

நெறிமுறை சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தேவை: பல்லம் ராஜூ

நெறிமுறை சார்ந்த ஒரு முழுமையான வாழ்க்கையை எப்படி அமைத்துக்
கொள்வது என்பது குறித்து அறிய, மாணவர்களுக்கு உதவ, நமது உயர்கல்வி அமைப்பு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய மனிதவள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கூறியதாவது:
நெறிமுறை சார்ந்த விஷயங்களில் நமது உயர்கல்வி அமைப்பு சிறப்பான
கவனம் செலுத்தியுள்ளது என்று யாராலும் கூற முடியாது.
வணிகக் கல்வியை எடுத்துக் கொண்டாலும்கூட, அதில் வலுவான
நெறிமுறை அம்சங்கள் இடம் பெற்றால், அதைப் படிக்கும் மாணவர்களால்
உலகளாவிய அளவில் சிறந்து விளங்க முடியும்.
நாட்டிலேயே, XLRI கல்வி நிறுவனம்தான், Managerial Ethics என்ற தலைப்பில், ஒரு மையப் படிப்பை முதன்முதலாக அறிமுகப்படுத்திய நிறுவனமாக
திகழ்கிறது. அதற்கு எனது பாராட்டுக்கள். கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவந்த பிறகு, நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்றைய நமது கல்வியறிவு 70% முதல் 74% என்ற அளவில் உள்ளது. அதில் பெண்களின் அளவு 66%. நம் நாட்டில் 700 பல்கலைகளும், 35,000 கல்லூரிகளும் உள்ளன. அவற்றில் மாணவர்களின் சேர்க்கை அளவு சுமார் 2 கோடி என்ற அளவில் உள்ளது. ஆனால், சர்வதேச தரம் வாய்ந்த கல்வியை அளிப்பதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு அவர்
கூறினார்.

No comments:

Post a Comment