Tuesday, December 24, 2013

உதவி பேராசிரியர்கள் நியமனம்: ரத்து கோரி ஐகோர்ட்டில் வழக்கு

'அரசு கலைக் கல்லூரிகளில், உதவி பேராசிரியர்கள் நியமனத்தில், 'நெட்'
தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், குறைந்த மதிப்பெண் வழங்குகிறது.
பல்கலை மானியக்
குழு விதிக்கு புறம்பான இந்த
நியமனங்களுக்கான அறிவிப்பை, ரத்து செய்ய
வேண்டும்' எனக் கோரி, மதுரை ஐகோர்ட்
கிளையில், மனு தாக்கல்
செய்யப்பட்டு உள்ளது.
மதுரையைச் சேர்ந்த, ராஜேஷ் தாக்கல் செய்த
மனு: எம்.எஸ்சி., முடித்து விரிவுரையாளர்
பணிக்கான, தேசிய தகுதித் தேர்வான - நெட் -
தேர்ச்சியடைந்துள்ளேன். அரசு கலை,
அறிவியல் கல்லூரிகளில், 1,093
உதவி பேராசிரியர்களை நியமிக்க, மே, 28ல்,
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர்,
அறிவிப்பு வெளியிட்டார். அதில்,
'உதவி பேராசிரியர் பணிக்கான தகுதிகளாக
முதுகலை பட்டம், அதே பாடத்தில், நெட்
தேர்வில் தேர்ச்சி அல்லது முதுகலை பட்டம்,
பிரதான பாடத்தில், பிஎச்.டி., முடித்திருக்க
வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
பல்கலை மானியக் குழு, 2009ல், வெளியிட்ட
விதிகள்படி, பிஎச்.டி., முடித்தவர்கள், நெட்
எழுதத் தேவையில்லை. மற்ற
முதுகலை பட்டதாரிகள் தான், நெட் எழுத
வேண்டும். நெட் தேர்வில்
தேர்ச்சியடைந்தவர்களுக்கு,
கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில்,
முன்னுரிமை வழங்க வேண்டும். நெட்
தேர்ச்சியானது, பிரதான தகுதியாகும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத
பட்சத்தில், பிஎச்.டி., முடித்தவர்களின்
பெயர்களை, நியமனத்தில் பரிசீலிக்கலாம்.
ஆனால் நேர்காணலில், பிஎச்.டி.,
முடித்தவர்களுக்கு அதிக மதிப்பெண், நெட்
தேர்ச்சியடைந்தவர்களுக்கு குறைந்தளவு மதிப்பெண்
வழங்கப்படுகிறது. பல்கலைக் கழக மானியக்
குழு விதிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம்
பின்பற்றவில்லை. பணி நியமனத்திற்கான,
தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்ய
வேண்டும். இவ்வாறு, மனுவில்
தெரிவித்துள்ளார். நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்
முன், நேற்று மனு பரிசீலனைக்கு வந்தபோது,
அதன் மீதான விசாரணையை ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment