Wednesday, December 11, 2013

காலியிடம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை: விரைவில் முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங்?

2014-15ம் கல்வியாண்டின் துவக்கத்தில்அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப, அடுத்த
வாரம் கவுன்சிலிங் அறிவிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள்
கூறுகின்றனர்.
தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து பாடப்பிரிவிலும், 5 ஆயிரம்
முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2013-14
கல்வியாண்டின் பொதுத்தேர்வுக்கு முன்பாகவேகாலியிடங்களை
நிரப்பபள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.ஏற்கனவே,முதுகலை
ஆசிரியர்பதவி உயர்விற்கு தகுதியான (பட்டதாரி ஆசிரியர்)பட்டியல் தயாரித்த
நிலையில், தற்போது,அப்பட்டியலில் திருத்தம் இருந்தால், அவற்றை உடனே சரி செய்து,அனுப்பசி.இ.ஓ.,க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது.இப்பட்டியல் இறுதி செய்த பின்,அடுத்த வாரத்தில்
முதுகலை ஆசிரியர்பதவி உயர்வு " கவுன்சிலிங்'தேதி அறிவிக்கப்படும்
என,எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநிலம் முழுவதும்உள்ள 5 ஆயிரம்
காலியிடத்தில்2 ஆயிரம் முதல் 3ஆயிரம் வரை, பட்டதாரியில்இருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.எஞ்சியஇடங்கள் டி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களை கொண்டு
நிரப்பநடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.வழக்கு போன்ற பிரச்னையால் 2 ஆயிரம் காலியிடம்நிரப்புவதில் சிக்கல் இருந்தால்,தள்ளிப் போகவாய்ப்புள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் ஆலோசனைப்படி, 2014-15
கல்வியாண்டின்துவக்கத்திலேயே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெரும்பாலும் முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாகஇருக்கக்கூடாது என்ற அடிப்படை யில் இந்தநடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.

No comments:

Post a Comment