Sunday, January 19, 2014

நிதி குறைப்பு: ‘அனைவருக்கும் கல்வி இயக்ககம்’ ஆசிரியர்கள் கலக்கம்

மத்திய அரசு ஆண்டுதோறும் அளித்து வரும் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கான நிதி குறைந்து
வருவதால்,  அத்திட்டத்தின்
செயல்பாடுகள் தமிழகத்தில் முடங்கும்
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில்
படிக்காதவர்களே இருக்கக் கூடாது என்ற
நோக்கில் மத்திய அரசு ‘சர்வ
சிக்ஷா அபியான்’ (எஸ்எஸ்ஏ) என்ற திட்டத்
தை கடந்த 2000ம் ஆண்டு கொண்டு வந்தது.
இந்த திட்டம் கொண்டுவரப்பட்டபோது,
அனைத்து மாநிலங்களிலும் 10
ஆண்டு களுக்கு இந்த திட்டம் தொடரும் என்றும்
அறிவித்தது. தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின்
கல்வியை பல்வேறு செயல்பாடுகள் மூலம்
ஒரு ங்கிணைந்து மேம்படுத்துவது இந்த
திட்டத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இந்த திட்டம் அறிமுகம்
செய்யப்பட் டபோது 385 வட்டார வள மையங்கள்
ஏற்படுத்தப்பட்டது. அவற்றில்
தலா ஒரு மேற்பார்வையாளர்கள்
நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதம் ஸி1
லட்சம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.
அந்த மையங்களில் ஆசிரியர்
பயிற்றுநர்களாக 4000 பேர் நேரடி நியமனம்
மூலம் பணியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில் இந்த திட்டம் 2000ல் தொடங்கிய
போது, ஆண்டுக்கு ஸி1000 கோடி வரை மத்திய
மனித வள மேம்பாட்டுத் துறை,
தமிழகத்துக்கு நிதியாக வழங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டுடன்
அனைவருக்கும் கல்வி திட்டம்
முடிவுக்கு வந்தது. முன்னதாக 2009ம்
ஆண்டு கட்டாய கல்வி உரிமைச்
சட்டத்தை மத்திய
அரசு இயற்றி அனைத்து மாநிலங்களிலும்
அதை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது.
அதன்படி கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2010ல்
தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. இதைத்
தொடர்ந்து அனைவருக்கும்
கல்வி இயக்ககத்தை, ஒவ்வொரு ஆண்டும்
நீட்டிக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது.
ஆனால், ஆண்டுதோறும் மத்திய மனிதவள
மேம்பாட்டு துறை வழங்கும், நிதியின்
அளவு குறையத் தொடங்கியது. கடந்த
ஆண்டு ஸி1200
கோடி நிதி தேவை என்று தமிழக
அரசு மத்திய அரசுக்கு திட்ட
அறிக்கை அனுப்பியது. மத்திய அரசோ மாநில
அரசு கோரிய நிதியை முழுமையாக
வழங்கவில்லை. இதனால்
நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டு அனைவருக்கும்
கல்வி இயக்கக பணிகள் முடங்கத் தொடங்கின.
அதனால் இருக்கும் நிதியை வைத்துக்
கொண்டு, இந்த திட்டத்தை நடத்த வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக
மாணவர்களுக்கு பயன்தரும்
கணினி தொடர்பான பயிற்சி படிப்படியாக
நிறுத்தப்படுகிறது. அதேபோல தொழிற்
கல்வி மற்றும் அதற்கான பயிற்சிகளும்
நிறுத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 6ம் வகுப்பு முதல்
8ம் வகுப்புகளில் படிக்கும் பெண்
குழந்தைகளின் கல்விக்காக தலா ஸி15 லட்சம்
செலவில் கற்பிக்கப்பட்டு வந்த ‘பெண் கல்வி’
என்ற திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல
கற்பிக்கும் செயல்பாடுகள் படிப்படியாக
குறைந்து வருகின்றன. இவை தவிர, 385
வட்டார வள மையங்களில் பணியாற்றி வந்த
மேற்பார்வையாளர்களில் பலர்,
அங்கிருந்து மாற்றப்பட்டு உயர்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர்களாக
நியமிக்கப்பட்டு வருகின்றனர். வட்டார வள
மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் 100 பேர்
பள்ளிகளுக்கு, ஆசிரியர்களாக
அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதம்
உள்ளவர்களும் விரைவில்
பள்ளி பணிகளுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்காக ஸி1000
கோடி தேவை என தமிழக அரசு திட்ட
அறிக்கை அனுப்பியும், மத்திய
அரசு குறைந்த
அளவிலேயே நிதியை ஒதுக்கியுள்ளது.
இதனால் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில்
பணியாற்றும் பணியாளர்கள் கலக்கத்தில்
உள்ளனர். இதே நிலை நீடித்தால் இந்த திட்டம்
தமிழகத்தில் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment