Sunday, January 19, 2014

தமிழ்நாடு தொடக்கக் கல்வியில் பின் தங்குகிறதா? ஆய்வு முடிவுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு

தமிழ் நாட்டில் கிராமப்புறத் தொடக்கப்
பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்
கல்வித்தரம் மிகவும் குறைவாக
இருப்பதாகவும்,
அவர்களில் மூன்றாம்
வகுப்பிலிருந்து ஐந்தாம்
வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில்
பாதிப்பேருக்குத்தான் தாய்மொழியில், முதல்
வகுப்புப் பாடப் புத்தகங்களையே படிக்க
முடிகிறது என்று கல்வியின் வருடாந்திரத்
தரம் குறித்த ,ஏசர், என்ற
அறிக்கை கூறுகிறது.
அதே போல, ஆறிலிருந்து எட்டாம்
வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் 31
சதவீதத்தினருக்கு மட்டுமே வகுத்தல்
கணக்கு தெரிந்திருப்பதாகவும்
அது கூறுகிறது. இந்தியாவில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்விக்கான
உரிமை என்ற சட்டத்தின் கீழ், பாடத்திட்டத்தில்
குறிப்பிடப்பட்டிருக்கும்
பாடங்களை முடிப்பதில் கவனம்
செலுத்துவதை விட, குழந்தைகள் கற்பதற்கான
இலக்குகளை எட்ட ஆசிரியர்கள் உதவ
வேண்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
ஆய்வு முடிவுகள் சரியல்ல-ஆசிரியர் சங்கம்,
முன்னாள் அமைச்சர் ஆனால் இந்த
அறிக்கை முடிவுகள் சரியனவை அல்ல
என்று கூறுகிறார் தமிழ் நாடு தொடக்கப்
பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர்
டி.கண்ணன் .கடந்த காலங்களை விட
தமிழ்நாட்டில் கல்வித்தரம்
உயர்ந்தே இருக்கிறது, அரசுகளும்
கல்வித்துறையில், கட்டமைப்பு வசதிகளைப்
போதிய அளவு தந்திருக்கின்றன. ஆனால்
ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால் பல
பிரச்சினைகள் உருவாகின்றன என்றும் அவர்
கூறுகிறார்.
ஆனால் இந்த
அறிக்கை தொடர்ந்து தமிழகத்தில் தொடக்கக்
கல்வி நிலை சரியாக
இல்லை என்று கூறுவது தமிழ் நாட்டில்
அரசுத் துறையால் தரப்படும்
கல்வி மீது பொதுமக்கள் நம்பிக்கையைக்
குலைத்து, தனியார்
துறை மீது நம்பிக்கையை வளர்க்கும்,
இது சரியானதல்ல என்கிறார் கண்ணன்.
தமிழக முன்னாள் தொடக்கப் பள்ளி அமைச்சர்
தங்கம் தென்னரசு அவர்களும், இந்த
அறிக்கையைத் தந்த நிறுவனம், எந்த
அடிப்படையில், எந்த முறையைப்
பின்பற்றி இந்த
ஆய்வை நடத்தியிருக்கிறது என்பதை
வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இந்த
முடிவுகள் யதார்த்தத்தில்
உண்மை நிலையைப்
பிரதிபலிக்கவில்லை என்கிறார்.
கிராமப்புறங்களில் கல்வித்தரம்
வீழ்ச்சி அடைகிறது என்பதை ஏற்றுக்கொள்ள
முடியவில்லை, ஏனென்றால்,
கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் படித்த
மாணவர்கள் மேல் நாடுகளில் நல்ல
வேலைவாய்ப்புகளைப் பெறும் நிலையைப்
பார்க்கிறோம் என்கிறார் தென்னரசு.
கல்வித்தரம்
என்பது தொடர்ந்து உயர்த்தப்படவேண்டிய
ஒரு வழிமுறை என்று கூறும் தங்கம்
தென்னரசு, இந்த அறிக்கை தந்த நிறுவனம்,
பொருத்தமான பயிற்சிகள் பெறாத
இணையாசிரியர்களை ஆசிரியர்
பணிக்கு நியமிக்கும் பீஹார் போன்ற
மாநிலங்களில் தரம் உயர்ந்திருப்பதாகக்
கூறுவது வேடிக்கையாக
இருக்கிறது என்கிறார்.

No comments:

Post a Comment