Wednesday, January 29, 2014

மாணவர்களை ஒழுக்கம் உடையவர்களாக ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்: ரோசய்யா பேச்சு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியின் 150–ம் ஆண்டு விழா (முப்பொன் விழா) இன்று காலை பள்ளியின் விளையாட்டு திடலில் நடைப்பெற்றது.

விழாவிற்கு தமிழக கவர்னர்
ரோசய்யா கலந்து கொண்டு பேசியதாவது:–
கும்பகோணத்தில் நகர
மேல்நிலைப்பள்ளியின் 150–
வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில்
பெருமை அடைகிறேன்.
இந்த பள்ளி கணித மாமேதை ராமானுஜம்
உள்ளிட்ட
பல்வேறு மாமேதைகளை உருவாக்கியுள்ளது.
21–ம் நூற்றாண்டில் அறிவு சார்ந்த
கல்வி புரட்சி உருவாக்க
பல்வேறு வாய்ப்புக்களை இந்தியா உருவாக்கி உள்ளது.
நம்நாட்டில் 120 கோடி மக்கள்
வசித்து வருகிறார்கள். இதில் மிகப் பெரிய
பலம் வாய்ந்த சக்தியாக இளைஞர்
சக்தி உள்ளது.
பள்ளி, கல்லூரிகள்
இளைஞர்களை கல்வி மூலம் தலைவர்களாக
உருவாக்க வேண்டும்.
ஆசிரியர்களும் கல்வி நிலையங்களும்
மாணவர்களை ஒழுக்கம், அன்பு,
அறிவு உடையவர்களாக உருவாக்க பாடுபட
வேண்டும்.
வரலாற்று பெருமைமிக்க கோவில்கள்
சூழ்ந்துள்ள தஞ்சை மாவட்டம்
கும்பகோணத்தின் பழமை வாய்ந்த நகர
மேல்நிலைப் பள்ளியில்
கணிதமேதை ராமானுஜம், வயலின் வித்வான்
உமையாள்புரம் சிவராமன், எச்.சி.எல்.
நிறுவனர் சிவ் நாடார், கல்வியாளர்
தம்புசாமி முதலியார்
ஆகியோர்களை உருவாக்கிய
பாரம்பரியமிக்கப் பள்ளி இந்த பள்ளி.
முன்னாள் காங்கிரஸ்
எம்.பி கருப்பையா மூப்பனாரும் இந்த
பள்ளியின் வளர்ச்சிக்கு பெரும்
பங்கை ஆற்றியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜி.கே.வாசன்,
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் என். சுப்பையன்,
திருவையாறு தியாக பிரம்ம மஹோத்ஸவ
சபை தலைவரும், நிர்வாகக்
குழு உறுப்பினருமான ஜி. ஆர். மூப்பனார்,
சாஸ்த்ரா பல்கலைக் கழக துணை வேந்தர்
பேராசிரியர் ஆர். சேதுராமன், நகர
மேல்நிலைப்பள்ளி பொன்விழாக்குழு தலைவர்
டாக்டர். டி.சீத்தாராமன், செயலர்
கே.பாலதண்டாயுதபாணி,
தலைமை ஆசிரியை ஆர். விஜயா மற்றும்
நிர்வாக குழு உறுப்பினர்கள்,
விழாக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்,
ஆசிரியைகள், மாணவ, மாணவிகள்
கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment