Thursday, March 13, 2014

கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு சமூக அக்கறை ஏற்படுத்தும் திட்டம் துவக்கம்

சமூக பிரச்னைகளை, பள்ளி மாணவர்களே கண்டறிந்து,
அவற்றிற்கு தீர்வு காணும், புதிய
திட்டத்தை, கோவில்பட்டி, சப் - கலெக்டர்
விஜயகார்த்திகேயன் துவக்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம்,
கோவில்பட்டியில், பள்ளியில் படிக்கும்
மாணவர்களுக்கு, சமூக
அக்கறை ஏற்படுத்தும், 'சமூக
பங்களிப்பு பதிவு திட்டத்தை'
துவக்கியுள்ள விஜயகார்த்திகேயன்,
'எந்தப் பள்ளி மாணவர்களும் இதில்
பங்கேற்கலாம்' என, அறிவித்துள்ளார்.
இதன்படி, மாணவர்கள் சந்திக்கும்,
சமூகத்தில் உள்ள, ஏதாவது,
ஒரு பிரச்னை மற்றும் அதற்கான தீர்வை,
மாணவர்கள் தினமும், எழுதி வர
வேண்டும். பள்ளியில் வைக்கப்பட்டுள்ள,
இதற்கான பெட்டியில், தாங்கள்
எழுதி வந்ததை, மாணவர்கள் போட
வேண்டும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், அந்தப்
பெட்டி திறக்கப்படும். சப் - கலெக்டர்
ஏற்பாட்டில், தன்னார்வ குழுக்கள் மற்றும்
ஆலோசனை குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுவில்,
கல்லூரி, என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்.,
அமைப்புகளில்
இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள்
இடம் பெற்றுள்ளனர். அந்த,
ஆலோசனை குழுவினர்,
பள்ளி மாணவர்கள் தெரிவிக்கும்
பிரச்னைகளுக்கு தீர்வு காண
நடவடிக்கை எடுப்பர். இதில், தன்னார்வ
குழுக்கள் செய்து முடிக்க கூடிய
பணிகள், அதிகாரிகள் மேற்கொள்ள
வேண்டிய பிரச்னைகள் என,
வகைப்படுத்தி, தீர்வு காண
நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கோவில்பட்டி, சப் - கலெக்டர்
விஜயகார்த்திகேயன் கூறியதாவது:
இந்த திட்டத்தில், மாணவர்கள், எந்த
பிரச்னையையும் பதிவு செய்யலாம்.
'பஸ்சில், கூட்டம் அதிகமாக இருக்கிறது'
என, மாணவர் தெரிவித்தால்,
தன்னார்வு குழு, அந்த
இடத்திற்கு சென்று,
கூட்டத்தை ஒழுங்குபடுத்தும்.
மாணவர்களின் வீட்டில், பெற்றோர்,
சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதாக,
மாணவர்கள் தெரிவித்தால், அவர்களின்
பெற்றோருக்கு, டாக்டர்கள்
அறிவுரை வழங்குவர். இது போல், பல
செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
இதில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர்,
ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு,
விஜயகார்த்திகேயன் கூறினார்.
முதற்கட்டமாக, இந்த திட்டம்,
கோவில்பட்டி நகரில் உள்ள பள்ளிகளில்
மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு,
கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து,
கோவில்பட்டி தாலுகாவில் உள்ள,
அனைத்து பள்ளிகளுக்கும்,
விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment