Wednesday, March 12, 2014

தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் அமைச்சர்களை அரசு அலுவலர்கள் சந்திப்பது குற்றமாகும்: திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன்

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன்
தலைமையில் நடை பெற்றது.
அனைத்து
கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள்,
மாநகராட்சி உதவி ஆணையர்கள்,
நகராட்சி ஆணையர்கள்,
பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மாவட்ட
ஆட்சியர் பேசியதாவது:
தேர்தல்
பிரச்சாரங்களுக்கு அனைத்து அரசியல்
கட்சிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கப்படும்.
எந்த ஒரு அரசு அலுவலரும்,
ஒரு அமைச்சர்
தொகுதிக்கு வரும்போது அவரை
சந்தித்தால் சம்மந்தப்பட்ட
சட்டப்பிரிவுகளின்படி குற்றமாகக்
கருதப்படும். தேர்தலில் போட்டியிடும்
ஒரு நபரின் கணவர்
அல்லது மனைவி அரசு அலுவலராக
இருப்பின், அவர்கள் தேர்தல் முடியும்
வரை விடுப்பிலோ அல்லது
பயணத்திலோ தலைமையிடத்தை
விட்டுச் செல்லக் கூடாது. பிரச்சாரம்,
தேர்தல் பிரச்சாரம் அல்லது தேர்தல்
சம்பந்தப்பட்ட பணிகளில்
அரசு வாகனத்தை பயன்படுத்தக்
கூடாது.
எந்த ஒரு அரசியல்
கட்சியோ அல்லது வேட்பாளரோ சாதி,
மதம் மற்றும்மொழியினரிடையே
வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில்
நடந்து கொள்ள அனுமதிக்கக்
கூடாது.அரசு தங்கும் விடுதிகளை,
அரசியல் கூட்டங்களுக்காகவோ,
ஆலோசனைக்காகவோ
பயன்படுத்துவதை அனுமதிக்கக்
கூடாது.கட்சிக் கொடி கம்பங்களில்
கொடிகளை அகற்றி, கொடிமரத்தில்
உள்ள வண்ணங்கள் மற்றும்
பெயர்களை மறைத்திட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர்
தெரிவித்தார்.வங்கிகள் மூலம்
நடைபெறும் பணப்பரிவர்த்தனைகள்
தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு
வருவதாகவும், குறிப்பாக ரூ. 1
லட்சத்திற்கும் மேலான வங்கிப்
பரிவர்த்தனைகள் அனைத்தும்
கண்காணிக்கப்படும். தினமும்
வங்கிகளிலிருந்து ஏடிஎம்
மையத்திற்கு கொண்டு செல்லப்படும்,
வாகனங்கள், பணியாளர்கள் குறித்த
விவரங்களையும் ஆட்சியர்
அலுவலகத்திற்கு தெரிவிக்க
உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும்
ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment