Wednesday, March 05, 2014

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் நாளை வேலைநிறுத்தம்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்
குழு (டிட்டோஜேக்) சார்பில் 7 அம்சக்
கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை (மார்ச் 6) வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கக்
கல்வி ஆசிரியர் இயக்கங்களின்
கூட்டு நடவடிக்கைக் குழுவின்
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
க.சேகர் வெளியிட்ட
செய்தி குறிப்பில்
கூறியுள்ளதாவது:
மத்திய
அரசு ஊழியர்களுக்கு இணையான
ஊதியம்
இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க
வேண்டும்,
தன்பங்கேற்பு ஓய்வூதியத்
திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,
தேர்வுநிலை, சிறப்பு நிலைக்குத்
தனியாக ஊதிய விகிதமும், தர
ஊதியமும் நிர்ணயிக்க வேண்டும்,
ஆசிரியர் தகுதித்
தேர்வை ரத்து செய்ய வேண்டும்,
தொடக்க கல்வித் துறையில் தமிழ்
வழிக்கல்வி முறைத் தொடர்ந்திட
வேண்டும், தமிழ்,
வரலாறு பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களை உருவாக்கிப்
பதவி உயர்வு மூலம் நிரப்ப
வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக்
கோரிக்கைகளை வலியுறுத்தி,
தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்
கூட்டணிகள்
ஒருங்கிணைந்து மார்ச் 6- ஆம்
தேதி வியாழக்கிழமை ஒரு நாள்
அடையாள வேலைநிறுத்தத்தில்
பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம்
ஒவ்வொரு வட்டாட்சியர்
அலுவலகங்கள் முன்னும்
கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில், சேலம் மாவட்டத்தில் 21
ஒன்றியங்களில் உள்ள 3 ஆயிரம்
ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்
என்று அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி:
வேலை நிறுத்தம் செய்ய
பிரச்சனை இல்லை என்பதால்
திட்டமிட்டப்படி 06.03.2014
அன்று வேலை நிறுத்தம்
நடைபெறும், டிட்டோஜாக் முடிவு
நாடாளுமன்ற தேர்தலுக்கான
அறிவிப்பு நாளை வெளியாக உள்ள
செய்தி இன்று மாலை வெளியானது
, இதையடுத்து நாளை மறுநாள்
நடைபெறவுள்ள டிட்டோஜாக்
சார்பில் மாபெரும் ஒரு நாள்
வேலை நிறுத்தத்திற்கு
முட்டுக்கட்டை ஏற்படுமோ என
பரவலாக ஆசிரியர்கள் மத்தியில்
பேசப்பட்டது.
இதையடுத்து டிட்டோஜாக
தலைவர்கள் உடனடியாக மூத்த
வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு
தேர்தல
் அறிவிப்பு வெளியாவது குறித்த
வினவினர்.
அப்பொழுது வழக்கறிஞர்கள்
சார்பில் வேலை நிறுத்தம்
செய்வதால் ஏதும்
பிரச்சனை இல்லை என்று
உறுதியளித்துள்ளதாக
தெரிவித்தனர்.
இதையடுத்து டிட்டோஜாக்
தலைவர்கள் திட்டமிட்டப்படி 06.03.2014
அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்
நடைபெறும்
என்று அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment