Tuesday, April 01, 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்
பணி இன்று முதல் முழுவீச்சில்
தொடங்குகிறது.
12ம் தேதிக்குள்
திருத்தி முடிக்க தேர்வுத்
துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2
தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம்
தேதி முடிந்தன. இதற்கிடையே 21ம்
தேதியே தமிழகம் முழுவதும் 66
மையங்களில் விடைத்தாள் திருத்தும்
பணியை முதன்மை தேர்வு
அதிகாரிகள் தொடங்கினர். 24ம்
தேதி துணைத் தேர்வர்கள் திருத்த
தொடங்கினர். அதில் தமிழ், ஆங்கிலப்
பாடங்களுக்கான தாள்கள் திருத்தும்
பணி நடக்கிறது. மற்ற பாடங்களுக்கான
தாள் திருத்தும்
பணி இன்று தொடங்குகிறது.
இன்றும் நாளையும்
முதன்மை தேர்வர்கள்,
சிறப்பு ஆய்வாளர்கள் திருத்துகின்றனர்.
3ம் தேதி துணைத் தேர்வர்கள் திருத்த
தொடங்குகின்றனர். வணிகவியல்
பாடத்துக்கான விடைத்தாள்கள் அதிகம்
இருப்பதால்
முன்கூட்டியே அவற்றை திருத்தும்
பணிகள் தொடங்கிவிட்டன. தமிழ்,
ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து பாட
விடைத்தாள்களும் 10ம் தேதிக்குள்
திருத்தி முடிக்கவேண்டும். திருத்திய
விடைத்தாள்களுக்கான
மதிப்பெண்களை டம்மி எண்களின்படி
பட்டியல் தயாரித்து 12ம் தேதிக்குள்
தேர்வுத் துறையிடம் ஒப்படைக்க
வேண்டும்.
12ம் தேதியுடன் திருத்தும் மையங்
களையும் மூட வேண்டும் என்றும்
தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக 40 ஆயிரம் ஆசிரியர்கள்
முழு வீச்சில் விடைத்தாள் திருத்தும்
பணியில் இன்று முதல்
இறங்குகின்றனர்.

No comments:

Post a Comment