Sunday, April 20, 2014

சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது: தமிழகத்தில் இருந்து 22 பேர் தேர்வு

சிறந்த ஆசிரியருக்கான, தேசிய
விருதுக்கு, தமிழகத்தில் இருந்து, 22 பேர்
தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இது குறித்த அறிவிப்பு, விரைவில்
வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணன்
பிறந்த நாளான, செப்., 5, தேசிய அளவில்,
ஆசிரியர் தின நாளாக
கொண்டாடப்படுகிறது. அந்நாளை ஒட்டி,
ஆசிரியர் பணியை சிறப்பாக செய்பவர்கள்,
தேசிய மற்றும் மாநில அளவில்
தேர்வு செய்யப்பட்டு, செப்., 5ல்,
விருது வழங்கப்படுகிறது. தேசிய
விருதுக்கு உரிய
ஆசிரியரை தேர்வு செய்ய, மத்திய
அரசு சார்பில்,
மாநிலத்திற்கு ஒரு கல்வியாளர்
நியமிக்கப்படுகிறார். இவர், மாநில
குழுவுடன் சேர்ந்து, சிறந்த
ஆசிரியரை தேர்வு செய்து, மத்திய
அரசுக்கு பட்டியல் அனுப்புவார். பட்டியல்
இறுதியானதும் பெயர் அறிவிக்கப்படும்.
கடந்த 2013ம் ஆண்டுக்கான விருது, வரும்,
செப்., 5ல் வழங்கப்பட உள்ளது. உத்தரகண்ட்,
ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட, பல
மாநிலங்களில், தேர்வு செய்யப்பட்ட
ஆசிரியர் பட்டியலை, மத்திய
அரசு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்திற்கான பட்டியல், இன்னும்
வெளியாகவில்லை. கல்வித்துறை வட்டாரம்
கூறுகையில், 'தமிழகத்திற்கு, 22
விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த
ஆசிரியர் பட்டியலை இறுதி செய்து,
மத்திய அரசுக்கு அனுப்பி விட்டோம்.
மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும்,
விரைவில், பட்டியல் வெளியாகும். தமிழக
அரசு வழங்கும் விருதுக்கான தேர்வுப்
பணி, ஜூனில் துவங்கும்' என,
தெரிவித்தது.

No comments:

Post a Comment