Monday, April 21, 2014

2.56 கோடி மீட்டர் துணி பள்ளி சீருடைக்கு உற்பத்தி

தமிழகத்தில், அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, சீருடைக்காக, 2.56
கோடி மீட்டர் துணி உற்பத்தியில்,
ஈரோடு நெசவாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
 தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில்
படிக்கும் ஏழை மாணவ,
மாணவியருக்கு சத்துணவு, சீருடை,
காலனி, புத்தகம்,
நோட்டு உள்ளிட்டவை இலவசமாக
வழங்கப்படுகின்றன. கோவை மாவட்டம்
பல்லடம், திருப்பூர், ஈரோடு, மதுரை,
விருதுநகர் மாவட்டங்களில், இலவச
சீருடை உற்பத்தி செய்யப்படுகிறது.
கைத்தறி, விசைத்தறி மற்றும்
"ஆட்டோ லூம்' (தானியங்கி தறி)
ஆகியவை மூலம், சீருடை துணிகள்,
கிரே, மெரூன், லைட் மெரூன்,
சாண்டால் ஆகிய நிறங்களில்
உற்பத்தி செய்கின்றனர். இந்த ஆண்டு, 5.06
கோடி மீட்டர் துணி, சீருடைக்காக
உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து, 16
ஆயிரம் தறி மூலம், பிப்ரவரி முதல்
வாரத்தில் துணி உற்பத்தி துவங்கியது.
ஈரோடு மாவட்ட துணி நூல் வழங்கல்
அதிகாரிகள் கூறியதாவது:
மாணவர்களுக்கான டிராயர் மற்றும்
பேண்டுக்காக, 47.8 லட்சம் மீட்டர்
துணியும், மாணவியருக்கான
பாவாடைக்கு, 38.31 லட்சம் மீட்டர்
துணியும், துப்பட்டாவுக்கு, 30.03 லட்சம்
மீட்டர் துணியும், மாணவ, மாணவியர்
சட்டைக்கு, 140.58 லட்சம் மீட்டர் துணியும்
உற்பத்தி செய்யப்படுகிறது.
துணி உற்பத்திகாக, கிரே, மெரூன்,
லைட் மெரூன், சாண்டால் கலர் நூல்கள்,
75 சதவீதம் தருவிக்கப்பட்டு,
சொசைட்டி மூலம்
நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
ஜூன் இறுதிக்குள், இரண்டு கோடியே,
56 லட்சத்து, 72 ஆயிரம் மீட்டர்
துணி உற்பத்தி செய்து முடிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment