Sunday, April 27, 2014

'கல்வியே மாணவர்களின் சக்தி வாய்ந்த கருவி' யு.ஜி.சி., : துணைவேந்தர் தேவதாஸ் பேச்சு

''போட்டி நிறைந்த உலகில், மாணவர்கள்,
கல்வி அறிவை அதிகம் வளர்த்து கொள்ள வேண்டும்.

கல்வியே மிகவும் சக்தி வாய்ந்த
கருவி,'' என, யு.ஜி.சி.,
துணைவேந்தர் தேவதாஸ் பேசினார்.
செம்மஞ்சேரி சத்யபாமா பல்கலைக்
கழகத்தின்,
23வது பட்டமளிப்பு விழா,
நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்த,
பல்கலைக் கழக நிறுவனர் ஜேப்பியார்,
ஜி.எஸ்.எல்.வி., திட்ட இயக்குனர் சிவன்,
திரை வசனக்கர்த்தா ஆரூர்தாஸ், நாதஸ்வர வித்வான்,
மாம்பலம் டி.கே.எஸ்.சிவா ஆகியோருக்கு, கவுரவ
டாக்டர் பட்டம் வழங்கி, கவுரவித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, யு.ஜி.சி.,
துணைவேந்தர் தேவதாஸ், மாணவ,
மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது:
பட்டம் பெற்ற மாணவர்கள், இந்த
பட்டத்தோடு நிறுத்தி கொள்ளாமல், ஒவ்வொருவரும்,
மேல் கல்வி கற்க முயற்சிக்க வேண்டும். அதனுடன்,
நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற
எண்ணத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும்.
உலகளாவிய போட்டியில், ஒவ்வொரு இந்திய
மாணவரும், தன்
அறிவை பன்மடங்கு வளர்த்து கொள்வது மிக
அவசியம். கல்வியே மிகவும் சக்தி வாய்ந்த கருவி.
மாணவர்கள், தங்கள் இலக்கை அடைய,
ஆசிரியர்கள்உறுதுணையாக நிற்க
வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில்,
பல்கலை இயக்குனர் மரியஜீனா ஜான்சன்,
மேரி ஜான்சன், ரெமிபாய் ஜேப்பியார் உள்ளிட்டோர்
பங்கேற்றனர். 2,500க்கும் மேற்பட்டோர்,
பல்வேறு துறைகளில் பட்டங்கள் பெற்றனர்.

No comments:

Post a Comment