Sunday, April 27, 2014

மாணவர்கள் "ஆன்-லைனில்' வேலைவாய்ப்பு பதிவு எளிது : தாமதத்தை தவிர்க்க கல்வித்துறை புதிய நடவடிக்கை

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில்
தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர்,
தேர்வு முடிவிற்குப் பின், அந்தந்த
பள்ளிகளிலேயே, தாமதம் இன்றி,
உடனுக்குடன், "ஆன்-லைனில்'
வேலைவாய்ப்பு பதிவு செய்ய,
கல்வித்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

பதிவு மூப்பு : தேர்வு முடிவிற்குப்பின்,
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில்
பதிவு செய்ய, மாணவ, மாணவியர், நீண்ட
வரிசையில் காத்திருப்பர். ஒரு நாள் தாமதம்
ஆனாலும், பதிவுமூப்பு தள்ளிப்போகும்
நிலையும் இருந்தது. இந்நிலையில்,
தேர்வு முடிவிற்குப்பின், மாணவர்கள், தங்கள்
பள்ளியிலேயே, "ஆன் - லைன்' மூலம்,
வேலை வாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ள,
இரு ஆண்டுகளுக்கு முன், திட்டம்
கொண்டு வரப்பட்டது. மேலும்,
அனைத்து மாணவர்களுக்கும்,
ஒரே பதிவு மூப்பு கணக்கை வழங்கவும்,
நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை,
தேர்வு முடிவிற்குப்பின், மாணவர்கள் பற்றிய
அனைத்து விவரங்களும், ஆன் - லைனில்'
பதிவேற்றம் செய்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
பதிவு செய்யப்பட்டது. பின்,
பதிவு செய்யப்பட்டதற்கான அட்டைகளும்,
மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
ஒரே நேரத்தில், ஏராளமான தகவல்களை,
இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதால், அதிக
நேரம் பிடிக்கிறது. இதனால், மாணவர்கள் தவிக்க
வேண்டிய நிலை உள்ளது. இந்த பிரச்னையை, இந்த
ஆண்டு தீர்க்கும் வகையில், கல்வித்துறை புதிய
நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாணவர்கள்
குறித்த முழு விவரங்களும், ஏற்கனவே பெறப்பட்டு,
கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மாணவர் பெயர், பெற்றோர் பெயர், பள்ளி, சொந்த ஊர்
உள்ளிட்ட பல விவரங்கள்
பதிவு செய்யப்பட்டு உள்ளன.
பயிற்சி : தேர்வு முடிவு வந்ததும், அதில்,
மதிப்பெண் சான்றிதழ் எண்களை மட்டும்
பதிவு செய்ய வேண்டியது மட்டும் தான் வேலை.
இதனால், உடனுக்குடன், எளிதில், பதிவு செய்ய
முடியும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரக
அதிகாரிகள், ஏற்கனவே, பள்ளி ஆசிரியர்,
பணியாளர்களுக்கு, "ஆன் - லைன்' வழியில்,
பதிவு செய்வது குறித்து,
பயிற்சி அளித்துள்ளனர். மேலும்,
ஒவ்வொரு பள்ளிக்கும், உபயோகிப்பாளர்
அடையாளம் (யூசர் ஐ.டி.,) மற்றும் ரகசிய எண்
(பாஸ்வேர்டு) ஆகியவற்றையும்,
வேலை வாய்ப்புத்துறை வழங்கி உள்ளது.
இதை பயன்படுத்தி, உடனுக்குடன்
வேலை வாய்ப்பு பதிவை மேற்கொள்ள, ஆசிரியர்கள்
திட்டமிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment