Saturday, April 26, 2014

தனியார் பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலுவை தலைவராக கொண்டு கமிட்டி செயல்படுகிறது.
இந்த கமிட்டியிடம் நேற்று பம்மலைச் சேர்ந்த எல்.கே.ஜி. முதல் 5-வது வகுப்பு வரை உள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளிக்கூடம் தொடர்பாக ஒரு புகார் தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த நீதிபதி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இப்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு விருப்பம் இல்லாமல் மாற்றுச்சான்று அந்த பள்ளியில் வழங்கக்கூடாது என்றும் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் எந்த ஒரு தனியார் பள்ளியும் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கக்கூடாது.
அவ்வாறு வசூலித்த பள்ளிகள் கூடுதலாக வசூலித்த பணத்தை மாணவர்களிடம் திரும்ப கொடுத்துவிட்டது. அவ்வாறு கூடுதலாக வசூலித்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தெரிவித்தார்

No comments:

Post a Comment