Saturday, May 24, 2014

10ம் வகுப்பிலும் பின்னுக்கு சென்றது விருதுநகர் மாவட்டம்!

பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சியில்,
26ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த
விருதுநகர் மாவட்டம், மூன்று ஆண்டுகளாக, பின்னோக்கி செல்கிறது.
இந்தாண்டு நான்காம்
இடத்தை பிடித்துள்ளது.ராமநாதபுரம்
மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, 1985ல்,
விருதுநகர் தனி மாவட்டமாக
உருவாக்கப்பட்டது. அது முதல்,
ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 மற்றும் பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில்,
விருதுநகர், மாநில அளவில் முதலிடம்
பிடித்து, தொடர் சாதனை படைத்தது. பிளஸ்
2வில், 29வது ஆண்டாக இந்தாண்டும், முதலிடம்
பிடிக்கும் என எதிர்பார்த்த நிலையில், 96.12
தேர்ச்சி சதவீதம் பெற்று, ஈரோடு,
நாமக்கல்லை தொடர்ந்து,
மூன்றாவது இடத்திற்கு, விருதுநகர்
தள்ளப்பட்டது.10ம்வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில்,
கடந்த 26 ஆண்டாக, மாநில முதல் இடத்தில்
இருந்த விருதுநகர்,இந்தாண்டாவது முதல்
இடத்தை பெறும் என்ற நிலையில், நான்காம்
இடத்தை பிடித்து பின்னோக்கி சென்றுள்ளது.இம்முறை,
மாநிலம் 4ம் இடத்தையே பிடித்துள்ளது.கடந்த
மூன்று ஆண்டுகளாக, இதே நிலை நீடிப்பதால்,
கல்வியாளர்கள்
அதிர்ச்சியடைந்துள்ளனர்.அரசு பள்ளிகளில்
போதிய ஆசிரியர்கள் இல்லாதது, இருக்கும்
ஆசிரியர்களும் முறையாக வராதது,
அதை அதிகாரிகள் கண்காணிக்காதது,
உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால்,
முதலிடத்தை பிடிக்க முடியாமல் போனதாக,
கல்வித்துறை ஆர்வலர்கள் குற்றம்
சாட்டுகின்றனர். மாவட்ட
முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார்,'' 10ம்
வகுப்பு தேர்ச்சியில், மாநில அளவில்
முதலிடத்தை பிடிக்க, தேவையான
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,''என்றார்.

No comments:

Post a Comment