Saturday, May 24, 2014

முதல் மூன்று இடங்களில் 16 மாணவ, மாணவிகள்: புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி 91.64 சதவீதம்!

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில், புதுச்சேரி மாநில அளவில்
முதலிடத்தை, மூன்று மாணவ
மாணவிகளும், இரண்டாம் இடத்தை,
நான்கு பேரும், மூன்றாம் இடத்தை, 9
பேரும் பிடித்துள்ளனர்.

தேர்வு முடிவுகள் தொடர்பாக, புதுச்சேரி முதல்வர்
ரங்கசாமி, நிருபர்களிடம்
நேற்று கூறியதாவது:புதுச்சேரி மற்றும் காரைக்காலில்,
18 ஆயிரத்து 419 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில், 16 ஆயிரத்து 879 மாணவ மாணவிகள்
தேர்ச்சி பெற்றுள்ளனர். 91.64 சதவீத
தேர்ச்சி கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டைவிட, 2.79
சதவீதம் குறைவாகும்.எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்
தேர்வில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் அளவில்,
குளூனி மேல்நிலைப் பள்ளி மாணவி ஹர்ஷினி,
அரியாங்குப்பம், இமாகுலேட் மேல்நிலைப்
பள்ளி மாணவர் அதேஷ், பெத்தி
செமினார் மேல்நிலைப் பள்ளி மாணவர்
சித்தார்த்தசூரியா ஆகிய மூவரும், 499 மதிப்பெண்கள்
பெற்று, முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.பெத்திசெமினார்
மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கபிலேஷ், ஷாம்சியர்,
பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பிரசாந்தி, மாணவர்
வெங்கடராமன் ஆகியோர், 498 மதிப்பெண்கள் பெற்று,
இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.அமலோற்பவம்
மேல்நிலைப் பள்ளி மாணவி புவனேஸ்வரி, மாணவர்
வசந்த், நெடுங்காடு, டான்பாஸ்கோ உயர்நிலைப்
பள்ளி மாணவி சிவசங்கரி, எஸ்.ஆர்.வி.எஸ்., நேஷனல்
உயர்நிலைப்பள்ளி மாணவி ஷாலி, திருக்கனூர்,
சுப்ரமணிய பாரதியார் ஆங்கில மேல்நிலைப்
பள்ளி மாணவி ஷமீரா பேகம், குளூனி மேல்நிலைப்
பள்ளி மாணவி யாஷ்மின், பெத்திசெமினார் மேல்நிலைப்
பள்ளி மாணவர்கள் ஹாரீஷ்குமார், நிதின் பிரேம்ஜி,
பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி தீபிகா ஆகியோர்,
497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவதாக வந்துள்ளனர்.
அரசு பள்ளிகள் அளவில், கதிர்காமம், அரசு பெண்கள்
மேல்நிலைப் பள்ளி மாணவி காயத்ரி, 494 மதிப்பெண்கள்
பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.நெட்டப்பாக்கம்,
கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தர்ஷிணி,
ஜெயாஸ்ரீ, வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்
பள்ளி மாணவி கீர்த்திகா ஆகியோர், 490 மதிப்பெண்கள்
பெற்று இரண்டாவது இடத்தையும், தட்டாஞ்சாவடி,
அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் ஜேம்ஸ் லூர்து,
கதிர்காமம், அரசு பெண்கள் மேல்நிலைப்
பள்ளி மாணவி ரம்யாதேவி ஆகியோர், 489 மதிப்பெண்கள்
பெற்று மூன்றாவது இடத்தையும்
பெற்றுள்ளனர்.இவ்வாறு ரங்கசாமி கூறினார்.கல்வி அமைச்சர்
தியாகராஜன், கல்வித் துறை செயலர் ராகேஷ் சந்திரா,
பள்ளிக் கல்வி இயக்குனர் வல்லவன் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment