Monday, May 26, 2014

சென்னை மண்டல சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது

சி.பி.எஸ்.இ.12–ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது.

சென்னை மற்றும் திருவனந்தபுரம் மண்டலத்தை சேர்ந்த மாணவ– மாணவிகளின் முடிவுகளை இணையதளத்தில் பகல் 12 மணிக்கு மத்திய வாரியம் வெளியிட்டது.
www.CBSE.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை மாணவ– மாணவிகள் தங்களது ‘ரோல் எண்’ மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.
சென்னை மண்டலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, அந்தமான் நிக்கோபார் லட்சத்தீவுகள் உள்ளிட்ட 8 மாநில பிரதேசங்கள் அடங்கும். தமிழ்நாட்டில் 400 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளன.
இதில் ஆயிரக்கணக்கான மாணவ– மாணவிகள் தேர்வு எழுதினர். சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முறை இந்த ஆண்டு தாமதமாக வெளியாகி உள்ளது.
என்ஜினீயரிங் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக ஏராளமான மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கி தேர்வு முடிவு எப்போது வரும் என்று காத்திருந்தனர்.
இந்த நிலையில் தேர்வு முடிவு இன்று வெளியானதால் மாணவ– மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தேர்வு முடிவு பற்றிய முழுவவிவரம், மதிப்பெண் சான்றிதழ் போன்றவை அந்தந்த பள்ளிகளுக்கு இன்று மாலைக்குள் சென்று விடும்.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம், தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற விவரங்கள் நாளை வெளியிடப்படுகிறது.
சென்னை மண்டல இயக்குனர் தேர்வு முடிவு பற்றிய முழு விவரங்களை நாளை அறிவிக்கிறார்

No comments:

Post a Comment