Thursday, May 08, 2014

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்: பாஜக

இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட
ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்
என தமிழக பாஜக தலைவர் பொன்.
ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து புதன்கிழமை அவர்
வெளியிட்ட அறிக்கை:
பொருளாதாரத்தில் நலிந்த மாணவ,
மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளில்
25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க
வகை செய்யும் சட்டம் பாஜக ஆதரவுடன்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் இந்தச்
சட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள
குறைகள், ஏழை மாணவர்களின்
கல்வியை கேள்விக்குறியாக்கியுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில் 25 சதவீத இட
ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட
மாணவர்களுக்கான கட்டணத்தை தமிழக
அரசு வழங்காததால் இந்த
ஆண்டு மாணவர்களைச் சேர்க்க மாட்டோம்
என தனியார் பள்ளிகள்
கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
தற்போது இந்த நிலையை இந்த
கூட்டமைப்பு மாற்றிக்
கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.
அரசு நிர்வாகத்தில் நிலவும் தாமதமும்,
அலட்சியமும், கல்வி விஷயத்திலும்
தொடர்வது கண்டிக்கத்தக்கது.
25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சுமார் 1,000
பள்ளிகளில் ஒரு மாணவர் கூட
சேர்க்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
எனவே, ஏழை மாணவர்களுக்கு தரமான
கல்வி கிடைக்கும் வகையில் 25 சதவீத இட
ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய
வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன்
வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment