Thursday, May 08, 2014

விடைத்தாள் நகல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும்
மறுகூட்டலுக்கு மே 9 முதல் 14-ஆம்
தேதி வரை தங்களது பள்ளிகள்
மூலமாக விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகலைப் பெற
மொழிப்பாடங்கள் மற்றும் ஆங்கில
விடைத்தாள்களுக்கு தலா ரூ.550-ம்,
ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும்
தலா ரூ.275-ம் கட்டணமாக செலுத்த
வேண்டும்.
மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள்,
ஆங்கிலம் மற்றும் உயிரியல்
பாடங்களுக்கு தலா ரூ.305-ம், ஏனைய
பாடங்கள் ஒவ்வொன்றுக்கும்
தலா ரூ.205-ம் கட்டணமாக செலுத்த
வேண்டும்.
இதற்கான கட்டணத்தை மாணவர்கள்
விண்ணப்பிக்கும்
பள்ளியிலேயே செலுத்த வேண்டும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment