Saturday, May 31, 2014

ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பின்னர்
பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும்
என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

இதற்கிடையே, தற்போது நிலவும்
கடுமையான வெயில் காரணமாக,
பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்படலாம்
என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்
மத்தியில் தகவல் பரவிய வண்ணம்
உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர்
வி.சி.ராமேஸ்வர முருகனிடம்
கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படி,
கோடை விடுமுறை முடிந்து அனைத்துப்
பள்ளிகளும் ஜூன் 2-ம்
தேதி (திங்கள்கிழமை) திறக்கப்படும்.
இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
பள்ளி திறக்கும் முதல் நாள் அன்றே,
மாணவ-
மாணவிகளுக்கு விலையில்லா பாடப்
புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள்
வழங்கப்படும். 5 கோடி புத்தகங்கள்
வழங்கப்பட உள்ளன. இதன்மூலம்
தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 30
லட்சம் மாணவ-மாணவிகள்
பயன்பெறுவார்கள்.
இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறினார்.

No comments:

Post a Comment