Saturday, May 10, 2014

ப்ளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு ரேங்க் பட்டியலில் திருச்சி "மிஸ்சிங்'

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்
நேற்று காலை வெளியாயின. இதில்
கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1,193 மார்க் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

தர்மபுரி ஸ்ரீவிஜய்
வித்யாலயா பள்ளி மாணவி அலமேலு, 2ம்
இடத்தையும், நாமக்கல் மாணவர் துளசிராஜன்,
சென்னை மாணவி நித்யா ஆகியோர் 3ம்
இடத்தை பிடித்துள்ளனர். மேலும், பாட வாரியாக
பல மாவடங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மாநில
அளவில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
ஆனால் திருச்சி மாவட்டத்தில்
பெயரளவுக்கு எஸ்.வி.எஸ்.,
மாணவி ஆனந்தி மட்டும், சமஸ்கிருத பாடத்தில்
மாநில அளவில் முதல்
இடத்தை பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.
இவரை தவிர வேறு யாரும் திருச்சி மாவட்டத்தில்
மாநில ரேங்க் பட்டியலில் இடம் பெறவில்லை.
எனினும் மாணவி ஆனந்தி மொத்தம் 1,193 மார்க்
பெற்றுள்ளார். மாநிலத்தில் முதலிடம் பிடித்த
மாணவி சுஷாந்தியும் 1,193 மார்க் பெற்றுள்ளார்.
ஆனால், திருச்சி மாணவி ஆனந்தி தமிழை முதல்
பாடமாக தேர்வு செய் யாமல், சமஸ்கிருத
பாடத்தை தேர்வு செய்து படித்திருந்ததால் மாநில
முதலிட
வாய்ப்பு கைநழுவி போ னது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முக்கிய இடத்தில் உள்ள
திருச்சி மாவட்டம், ப்ளஸ் 2 தேர்வில் மாநில
அளவிலான ரேங்க் பட்டியலில் அதிகளவில்
இடம்பெறாமல் போனது கல்வியாளர்கள்,
கல்வி துறையினர், மாணவ மாணவிகள்,
ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில்
கவலையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment