Saturday, May 10, 2014

பிளஸ் 2 தேர்வில் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்ததில் தனியார் பள்ளிகள் ஆதிக்கம்

பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில்
முதலிடம் பிடித்ததில், தனியார்
பள்ளிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

வருவாய் மாவட்ட வாரியாக முதலிடம்
பிடித்தவர்களின் விவரம்:
* கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹீப்ரான்
பள்ளி மாணவி ஆர்.மிருனாளினி 1188
மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
* நெல்லை மாவட்டத்தில்
எஸ்.ஜெ.எஸ்.ஜூப்ளி பள்ளி மாணவி பாலப்பிரியா 1185
மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
* தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜ்
மெட்ரிக் பள்ளி மாணவிகள் பானுமதி,
மரியா சைனி கமலசந்திரிகா, புனித தாமஸ்
மெட்ரிக் பள்ளி மாணவர் சாய் குமார்
ஆகியோர் 1182 மதிப்பெண்கள்
பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.
* ராமநாதபுரம் மாவட்டத்தில் சையத் அம்மாள்
மெட்ரிக் பள்ளி மாணவி மில்கச் காட்பெல்
1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
பிடித்தார்.
* சிவகங்கையில் மகரிஷி வித்மன்
பள்ளி மாணவர் 1186 மதிப்பெண்கள்
பெற்று முதலிடம் பிடித்தார்.
* விருதுநகர் வருவாய் மாவட்டத்தில்
ராஜபாளையம் பி.ஏ.சி.எம். பள்ளி மாணவர்
ஞானவேல்ராஜா 1187 மதிப்பெண்கள்
பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
* தேனியில் மேரி மாதா மெட்ரிக்
பள்ளி மாணவி ரக்ஷணா 1182 மதிப்பெண்கள்
பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
* மதுரையில் சி.இ.ஓ.ஏ. மெட்ரிக்
பள்ளி மாணவி லலிதா 1186 மதிப்பெண்கள்
பெற்று முதலிடம் பிடித்தார்.
* திண்டுக்கல் மாவட்டத்தில் செயின்ட் ஜோசப்
பள்ளி மாணவி 1187 மதிப்பெண்கள்
பெற்று முதலிடம் பிடித்தார்.
* ஊட்டி கிரசெண்ட் பள்ளி மாணவர்
முகமது எஸ்ஸார் 1186 மதிப்பெண்களுடன்
முதலிடம் பிடித்தார்.
* திருப்பூர் வருவாய் மாவட்டத்தில்
உடுமலைப்பேட்டை ஆர்.ஜி.எம்.
பள்ளி மாணவி ப்ரீதி 1187
மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார்.
* கோவையில் வித்யா விகாஸ்
பள்ளி மாணவி மேகலா 1188 மதிப்பெண்கள்
பெற்று முதலிடம் பிடித்தார்.
* ஈரோட்டில் ஏ.கே.ஹெச்.என். பள்ளி மாணவர்
1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
பிடித்தார்.
* சேலத்தில் எஸ்.ஆர்.கே. மெட்ரிக்
பள்ளி மாணவர் கந்தநிவராஜ் 1190
மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
* நாமக்கல் மாவட்டத்தில் கிரீன் பார்க் மெட்ரிக்
பள்ளி மாணவர் துளசிராஜன் 1191
மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில்
முதலிடமும், மாநிலத்தில்
மூன்றாவது இடமும் பிடித்தார்.
* கிருஷ்ணகிரி மாவட்டம் ஸ்ரீவித்யா மந்திர்
பள்ளி மாணவி சுஷாந்தி 1193
மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில்
முதலிடமும், மாநிலத்தில் முதல் இடமும்
பிடித்தார்.
* தர்மபுரி மாவட்டத்தில் ஸ்ரீவிஜய விடிஎம்
பள்ளியைச் சேர்ந்த மாணவி அலமேலு 1192
மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில்
முதலிடமும் மாநிலத்தில்
இரண்டாவது இடமும் பிடித்தார்.
* புதுக்கோட்டை மாவட்டத்தில்
வித்யா விகாஸ் பள்ளி மாணவி ஜானகி 1185
மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
* கரூரில் சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர்
எம்.ஜி.பாரதி 1186 மதிப்பெண்கள்
பெற்று முதலிடம் பிடித்தார்.
* அரியலூரில்
மாண்ட்ஃபோர்டு பள்ளி மாணவர் ஹரிஹரன்
1162 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
பிடித்தார்.
* பெரம்பலூரில் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக்
பள்ளி மாணவர் கவின்ராஜ் 1187
மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
பிடித்துள்ளார்.
* திருச்சி மாவட்டத்தில் துறையூர்
செளடாம்பிகா மெட்ரிக்
பள்ளி மாணவி அகல்யா 1189 மதிப்பெண்கள்
பெற்று முதலிடம் பிடித்தார்.
* நாகப்பட்டினத்தில் ராஜ் மெட்ரிக்
பள்ளி மாணவி தேவ அபிநயா 1180
மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
* திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீ ஜி.ஆர்.எம்.
பள்ளி முஸ்ரிதா நஸ்ருன் 1177 மதிப்பெண்கள்
பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
* தஞ்சையில் பி.ஆர்.பப்ளிக் பள்ளி மாணவர்
ஸ்ரீநாத் 1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
பிடித்தார்.
* விழுப்புரம் மாவட்டத்தில்
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகெடமி பள்ளி மாணவி சரண்யவதி 1188
மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
* கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி ஜவஹர்
மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி 1188
மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
* திருவண்ணாமலை மாவட்டத்தில்
சிஷ்யா மெட்ரிக்
பள்ளி மாணவி கார்த்திகா 1189
மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
* வேலூர் மாவட்டத்தில் சன் பீம் மெட்ரிக்
பள்ளி மாணவி ஹேமத் 1186 மதிப்பெண்கள்
பெற்று முதலிடம் பிடித்தார்.
* காஞ்சிபுரம் மாவட்டத்தில் மடிப்பாக்கம்
பிரின்ஸ் மெட்ரிக்
பள்ளி மாணவி நித்யா 1191 மதிப்பெண்கள்
பெற்று முதலிடமும், மாநிலத்தில்
மூன்றாவது இடமும் பிடித்துள்ளார்.
* திருவள்ளூர் மாவட்டத்தில் முகப்பேர்
வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர் ரஞ்சித்
1188 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
பிடித்தார்.
* சென்னை மாவட்டத்தில் அண்ணா ஆதர்ஷ்
மெட்ரிக் பள்ளி மாணவி என்.ப்ரீதி 1185
மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
பிடித்துள்ளார்.
* புதுச்சேரியில் எஸ்.டி.ஏ. பள்ளி மாணவர்
சிவ கணேஷ் 1181 மதிப்பெண்கள்
பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment