Wednesday, May 14, 2014

மாநில அளவில்போராட்டம்தலைமையாசிரியர்கள்முடிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில்,தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
மீதான நடவடிக்கையை கண்டித்து, மாநில அளவில் போராட்டங்கள் நடத்த,
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கம்
முடிவு செய்துள்ளது.
சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:
பிளஸ் 2 மற்றும் பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்,
ஒவ்வொரு பள்ளிகள் வாரியாக,
பகுப்பாய்வு அறிக்கை பெற்ற பின் தான்,
பள்ளிக் கல்வி சார்பில், ஆசிரியர்கள்,
தலைமையாசிரியர் மீது நடவடிக்கை மற்றும்
தண்டனை அல்லது பயிற்சி அறிவுரை வழங்கப்படும்.பத்தாம்
வகுப்பு தேர்ச்சி வெளியாகாமல், பிளஸ் 2
தேர்ச்சி முடிவு மட்டுமே வெளியாகியுள்ள
நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 3
தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை,
அதிர்ச்சி தருகிறது. இயக்குனர் மற்றும்
அரசு முதன்மை செயலாளர் இதில்
தலையிட்டு, நடவடிக்கையை ரத்து செய்ய
வேண்டும். தவறினால்,
அனைத்து ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில்
போராட்டம் நடத்தப்படும்.
முதல்வரை சந்தித்து மனு அளிக்கப்படும்,
என்றார்.

No comments:

Post a Comment