Friday, May 09, 2014

சமஸ்கிருதத்தை மொழி பாடமாக படித்து முதலிடம் பிடித்த திருச்சி மாணவி

இன்று வெளியான பிளஸ்–2 தேர்வு முடிவில் திருச்சி சாவித்ரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஆனந்தி 1,193 மதிப்பெண்
பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவர் சமஸ்கிருதத்தை மொழி பாடமாக
எடுத்து படித்துள்ளார்.
எதிர்கால விருப்பம்
பற்றி மாணவி ஆனந்தி நிருபர்களிடம்
கூறியதாவது:–
எனது தந்தை பரமேஸ்வரன் பெல்
நிறுவனத்தில் அதிகாரியாக
பணியாற்றி வருகிறார். நான்
சாவித்ரி வித்யாசாலா பள்ளியில்
பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
பிளஸ்–2 தேர்வு எழுதினேன்.
இங்கு ஆசிரியர்கள் மிகவும்
ஊக்கமளித்தனர். எனக்கு மட்டும்
அல்ல பிளஸ்–2 படித்த அனைவரும்
மாநிலத்தில் முதல் இடத்தில் வர
வேண்டும் என்ற நோக்கத்தில்
சிறந்த பயிற்சியும்
வழங்கப்பட்டது.
பள்ளியில் முதல் 2 மற்றும் 3–ம்
இடங்களை பிடித்து வந்த நான்
மாநிலத்தில் முதல்
இடத்தை பிடித்திருப்பது மிகுந்த
மகிழ்ச்சி அளித்து வருகிறது.
ஆசிரியர்கள் கொடுத்த
ஊக்கத்தினால் அன்றாடம் உள்ள
பாடங்களை தவறாறு படித்ததால்
இந்த
வெற்றி கிடைத்துள்ளது என்று நினைக்கின்றேன்.
எதிர்காலத்தில் கணித
மேதையாகி சிறப்பாக பணியாற்ற
விரும்புகிறேன்.
எனது சகோதரி ஜனனி தனியார்
நிறுவனம் ஒன்றில்
பணியாற்றி வருகிறார். எனது தாய்
சொர்ணலதா எனது படிப்பிற்கு மிகுந்த
ஊக்கமளித்தார். எனக்கு இந்த
வெற்றியை தேடிக்கொடுத்த இந்த
பள்ளி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்
கொள்கிறேன்.

No comments:

Post a Comment