Wednesday, May 28, 2014

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கலெக்டர் உத்தர

திருவள்ளூர் மாவட்டத்தில் 6 முதல் 14 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி மாவட்ட கலெக்டர் வீர ராகராவ் ஆலோசனைபடி நடைபெற்றது.

இதற்காக பள்ளி அளவில் ஆசிரியர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், கிராம கல்விக் குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் அனைத்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த கணக்கெடுப்பில் இதுவரை 1760 பள்ளிச்செல்லா குழந்தைகளும், 5269 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும் கண்டறியப்பட்டு உள்ளனர்.
பள்ளிசெல்லா குழந்தைகள் அனைவரையும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப்படும் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையம், நீண்டகால மற்றும் குறுகிய கால சிறப்பு மையங்களிலும், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் அனைவரையும் பகல்நேர பாதுகாப்பு மையங்களிலும் ஜூன் முதல் வாரத்தில் சேர்த்து கல்வி வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment