Thursday, June 26, 2014

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: வெளிப்படையாக நடத்த உத்தரவு

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக இருந்த வி.வையணன், கலந்தாய்வு மூலம் தூத்துக்குடி மாவட்டம் கடல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராக (உயிரியல்) பதவி உயர்வு பெறுவதற்கு வையணன் தகுதியானார். இந் நிலையில் 2012-13-ஆம் ஆண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது.
அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 4 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (உயிரியல்) காலியாக இருந்தன. அந்தக் காலிப்பணியிடங்கள் கலந்தாய்வின்போது வெளிப்படுத்தப்படவில்லை. அதனால், வையணனுக்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாறுதல் வழங்கப்பட்டது.
கலந்தாய்வின் போது திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாக இருந்த 3 பணியிடங்கள் குறித்து அறிவிக்கவில்லை. அதனால், திருநெல்வேலி சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி வையணன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், அந்தப் பள்ளியில் வேறு யாரையும் பணியமர்த்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், அந்தப் பணியிடம் முன்னதாகவே நிரப்பப்பட்டதாக பள்ளிக் கல்வித் துறை கூறியதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையை விதிகளுக்குள்பட்டு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20 மற்றும் 22-ஆம் தேதிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வின் போது தூத்துக்குடி மாவட்டம் ராமானுஜம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்த காலிப் பணியிடம் காண்பிக்கப்படவில்லை.
அந்தக் காலியிடத்தை கலந்தாய்வில் காட்டாமலேயே பள்ளிக் கல்வித் துறை நிரப்பியுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து விட்டு, புதிதாக பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த உத்தரவிடுமாறு வையணன் மற்றுமொரு வழக்கைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அந்தப் பள்ளியில் ஏற்கெனவே ஒருவர் நியமிக்கப்பட்டு விட்டார். அதனால் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஜூன் 24-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் கலந்தாய்வில் மனுதாரரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும். மேலும், இந்தப் பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Email0 Print A+ A A-
இந்த பகுதியில் மேலும்
ஏழு மாவட்டங்களில் கூடுதலாக 10 அம்மா மருந்தகங்கள்: முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
சீனப் பெண்ணை மணந்த புதுகை இளைஞர்
தொடரும் வெயில்: குற்றாலம் அருவிகளில் குறைந்தது நீர்வரத்து
அண்ணாமலை பல்கலைக்கழக எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின
பிரதமர் மோடி 29 ஆம் தேதி சென்னை வருகை
திருவாரூர் மத்திய பல்கலை. வளாகத்தில் ஒடிஸா தொழிலாளி அடித்துக் கொலை
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
நெல்லையில் 28-இல் தி.க.சி. நினைவேந்தல்: தினமணி ஆசிரியர் பங்கேற்பு
கிருஷ்ணராயபுரத்தில் காவிரி குறுக்கே புதிய கதவணை: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
மோரீஷஸில் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்த மாநாடு
"ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்க தீயணைப்பு துறையினருக்கு அதிநவீன கருவிகள் தேவை'
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் சாவு
பி.இ. மெக்கானிக்கல் பிரிவுக்கு முன்னுரிமை அளித்த விளையாட்டு வீரர்கள்
சிட்கோ தலைமை அலுவலக கட்டடம்: முதல்வர் திறந்து வைத்தார்
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: வெளிப்படையாக நடத்த உத்தரவு
குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்

No comments:

Post a Comment