Wednesday, July 30, 2014

பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு!

885 வட்டார வளமைய ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்தாமல் தேர்வு வாரியம் மூலம்
ஆசிரியர்களை நியமிக்கத்
தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வட்டார வள மைய
பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்க
பொதுச் செயலர் எம். ராஜ்குமார் இந்த
மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.மனு விவரம்:
ஒவ்வோர் ஆண்டும் 500 வட்டார வள மையப்
பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில்
அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக
நியமிக்கப்பட வேண்டும் என 2006-இல்
அரசு உத்தரவிட்டது.
2012-2013 ஆம் ஆண்டில் 115 பயிற்றுநர்கள்
மட்டுமேபட்டதாரி ஆசிரியர்களாக
நியமிக்கப்பட்டனர். மேலும், 385 வட்டார
கண்காணிப்பாளர்கள் அரசுப் பள்ளிகளில்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக
நியமிக்கப்பட்டனர். அரசாணைப்படி வட்டார
வள மைய பயிற்றுநர்கள்தான்
பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட
வேண்டும். 385 வட்டார
கண்காணிப்பாளர்களை முதுகலைப்
பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்தது தவறு.
2013-2014 ஆம் ஆண்டு 500
பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக
நியமிக்கவில்லை.எனவே, மொத்தம் 885 வட்டார
வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை அரசுப்
பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக
நியமிக்க உத்தரவிட வேண்டும்.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம்
பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமிக்க
14.7.14 இல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதைரத்துசெய்ய வேண்டும். 885
பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக
நியமித்த பின்பு உள்ள காலிப்
பணியிடங்களில் நேரடியாக
பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிட
வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம்
மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன்,
மனுவுக்கு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச்
செயலர்,இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியத்
தலைவர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ்
அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment