Sunday, August 17, 2014

கரும்பலகை வாங்க பள்ளி மானியம்; ஆகஸ்ட் இறுதிக்குள் வழங்க உத்தரவு

கரும்பலகை, உலக உருண்டை, மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் வாங்க பள்ளி மானியம் இம் மாதம் இறுதிக்குள் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 30 கோடியே 40 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பள்ளி மானியம்(ஸ்கூல் கிரான்ட்) நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள துவக்கப்பள்ளிகளுக்கு 5,000 ரூபாயும், நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு 7,000 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இந்நிதியில் பள்ளிக்கு தேவையான மைக், மின் அழைப்பான், உலக உருண்டை, மின்விசிறி, கரும்பலகை உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டும். இதுபோல், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மட்டும் 27 கோடியே 17 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பள்ளி பராமரிப்பு மானியமாக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதில் மூன்று வகுப்பறை கட்டடம் உள்ள பள்ளிகளுக்கு 5,000 ரூபாயும், அதற்கு மேல் உள்ள வகுப்பறை கட்டடங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு வழங்கபட உள்ளது. இந்நிதியில் பள்ளி கதவு, கழிப்பறை, தண்ணீர் தொட்டி, கட்டடத்தின் மேற்கூரை உள்ளிட்டவைகளை பராமரிப்பு செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நிதியை இம் மாதம் இறுதிக்குள் பள்ளிகளில் உள்ள கிராம கல்விக் குழு பெயரில் வங்கியில் செலுத்தவேண்டும். டிசம்பர் மாதத்திற்குள் தேவையான பணிகளை முடித்திருக்க வேண்டும், என முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment