Wednesday, October 01, 2014

புதிதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி

புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள 12
ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

முப்பருவ முறை, தொடர்
மதிப்பீட்டு முறை, பாடங்களில் முக்கியப்
பகுதிகள் எவை,
தேர்ச்சி விகிதத்தை எவ்வாறு அதிகரிப்பது போன்றவை த
பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன.
முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்
பாடங்களைப் புதுமையாக
எப்படி கற்பிப்பது போன்றவை தொடர்பான
பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம்
10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649
இடைநிலை ஆசிரியர்கள், 2,353
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்
ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல்
செப்டம்பர் 5-ஆம்
தேதி வரை பணி நியமனக்
கலந்தாய்வு நடைபெற்றது.
தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண்
முறைக்கு எதிராகத் தொடரப்பட்ட
வழக்குகள் காரணமாக
தேர்வுசெய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்,
இடைநிலை ஆசிரியர்களுக்குப்
பணி நியமன ஆணை வழங்க நீதிமன்றம்
தடைவிதித்தது.
இந்த நிலையில், சென்னை உயர்
நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, உயர் நீதிமன்ற
மதுரைக் கிளை இந்தத்
தடை உத்தரவை விலக்கிக் கொண்டது.
இதையடுத்து, புதிதாகத்
தேர்வு செய்யப்பட்ட
பட்டதாரி ஆசிரியர்கள்,
இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும்
தங்களுக்கான பணியிடங்களில்
சேர்ந்தனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பயிற்சி:
பள்ளிக் கல்வித் துறையில்
பணி நியமனம் பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களுக்கான
பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அந்தந்த மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்கள்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான
பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை, திருநெல்வேலி,
கன்னியாகுமரி உள்ளிட்ட 5
மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள்
இல்லை. இந்த மாவட்டங்களைத் தவிர
ஏனைய மாவட்டங்களில் பணியில் சேர்ந்த
ஆசிரியர்களுக்குப்
பயிற்சி வழங்கப்படுகிறது.
முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு....
புதிதாகப் பணியில் சேர்ந்த
முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம்
முழுவதும் 7 இடங்களில்
பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
சேலம், ஈரோடு, நாமக்கல், விழுப்புரம்,
மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய
இடங்களில் இந்த ஆசிரியர்களுக்குப்
பயிற்சி வழங்கப்படுகிறது.
புதன்கிழமை வரை ஆசிரியர்களுக்குப்
பயிற்சி வழங்கப்படும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.

No comments:

Post a Comment