Sunday, October 19, 2014

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலை வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்
பள்ளிகளின் பட்டியலை வெளியிடக்கோரி,
வரும் 29ம் தேதி, மாநிலம் முழுவதும்,
முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்
ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்
அறிவித்துள்ளது.

சங்கத்தின் மாநில தலைவர்,
நடராசன் அறிவித்ததாவது:
நடப்பு கல்வி ஆண்டில் 50 நடுநிலைப்
பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்
இதுவரை, பட்டியல் வெளியாகவில்லை; இந்த
பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும்.
நூறு உயர்நிலைப் பள்ளிகள்,
மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இதற்கு, தலைமை ஆசிரியர் நியமனம்
இன்னும் நடக்கவில்லை. நேர்மையாக,
வெளிப்படையான முறையில்,
கலந்தாய்வு மூலம்
தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும்
என்பது உள்ளிட்ட 20 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 29ம்
தேதி மாலை, 5:30 மணிக்கு, மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்
ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்
அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment