Tuesday, October 21, 2014

ஆசிரியர்கள் சமுதாயத்தின் ஒளிவிளக்குகள்! : 'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருது வழங்கி சி.இ.ஓ., பேச்சு

"ஒவ்வொரு ஆசிரியரும் சமுதாயத்தின்
ஒளிவிளக்குகள். திறன் மிக்க மாணவ
சமுதாயத்தை உருவாக்கும் புனித
பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு," என
மதுரை முதன்மை கல்வி அலுவலர்
ஆஞ்சலோ இருதயசாமி பேசினார்.

மதுரையில் 'தினமலர் லட்சிய ஆசிரியர்
2014'
விருதுக்கு தேர்வானவர்களுக்கு விருது வழங்கி அவர்
பேசியதாவது: கல்வி மூலம் தான் நல்ல
சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற
உண்மையை உணர்ந்து ஆண்டுதோறும்
இப்போட்டிகளை நடத்தி திறமையான
ஆசிரியர்களை சமுதாயத்திற்கு அடையாளம்
காட்டும் உன்னத பணியை 'தினமலர்'
மேற்கொண்டு வருகிறது. இது, ஆசிரியர்
சமுதாயத்திற்கு செய்யும் சேவை.
அறிவுசார்ந்த சமூக
வளர்ச்சியை அளவுகோலாக
வைத்து ஒரு நாடு முன்னேறியதற்கான
அடையாளம் காணப்படுகிறது.
இதற்கு முக்கிய பங்காற்று பவர்கள்
ஆசிரியர்கள். அதனால் தான்
கடவுளுக்கு முன்னதாக அவர்களை நாம்
நினைவு கூர்கிறோம். ஆசிரியர்
பணிக்கு முடிவு என்பது இல்லை.
அவர்கள் மூலம் முன்னேறும்
மாணவர்களால், எங்கும்
எப்போதும் ஆசிரியர்கள் நினைத்துக்
கொண்டு தான் இருப்பர்.
கல்வியை தவிர்த்து பிற துறைகளில்
இதுபோன்று இல்லை.
நல்ல ஆசிரியர்கள் : சமுதாயத்தின்
ஒளிவிளக்குகள். நாட்டின்
வளர்ச்சியை நிர்ணயிக்கும்
திறன்மிக்க மாணவர் களை அவர்கள்
தான் உருவாக்க முடியும். கோயில்
பணிக்கு இணையானது, ஆசிரியர் பணி.
மாணவர்களின் திறன்களை படித்து, பாடத்
திட்டங்களை தாண்டி சிந்திக்கும்
விஷயங்களை கற்றுக்கொடுக்க
வேண்டும். அப்போது தான் திறன்மிக்க
தலைமுறைகள் உருவாகும், என்றார்.

No comments:

Post a Comment