Wednesday, February 04, 2015

பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் ‘தட்கல்’ திட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது

பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் ‘தட்கல்’ திட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக
அரசுத் தேர்வுகள் இயக்குநர்
கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட
செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
மார்ச் மாதம் நடைபெறவுள்ள
பிளஸ்-2 பொதுத்
தேர்வுக்கு தேர்வுத்துறையால்
அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-
லைனில் விண்ணப்பிக்கத் தவறி,
தற்போது விண்ணப் பிக்க விரும்பும்
தனித்தேர்வர்
களிடமிருந்து சிறப்பு அனுமதி
திட்டத்தின் கீழ் (தட்கல்) ஆன்-லைனில்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்-லைனில் விண்ணப் பிப்பதற்காக
ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும்
அரசு தேர்வுத்
துறை சேவை மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு மையங்களின் விவரங்
களை தேர்வுத்துறையின் இணைய
தளத்தில் (www.tndge.in)
தெரிந்து கொள்ளலாம். தனியார்
பிரவுசிங் மையங்கள் மூலம்
விண்ணப்பிக்க இயலாது.
தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த
கல்வி மாவட்டத்திலிருந்து
விண்ணப்பிக்கிறார்களோ, அந்த
மாவட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள அரசுத்
தேர்வுத்
துறை சேவை மையத்துக்கு நாளை (
வியாழக்கிழமை) முதல் 7-ம்
தேதி வரை நேரில் சென்று ஆன்-
லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும்
அனைத்து தனித்தேர்வர்களுக்கும்
சென்னையில் மட்டுமே தேர்வு மையம்
அமைக்கப்படும். இவ்வாறு தேவராஜன்
கூறியுள்ளார்.

No comments:

Post a Comment