Wednesday, February 04, 2015

மாணவ, மாணவியர் பாதுகாப்பு தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அறிவுரை

மாணவ, மாணவியர் பாதுகாப்பு தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
* பள்ளி மாணவ, மாணவியர் வீட்டில்
இருந்து பள்ளிக்கு வரும் போதும்,
மீண்டும் வீடு திரும்பும் போதும்,
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற
வேண்டும்.
* விலை உயர்ந்த ஆபரணங்கள்
அணிந்து வரக் கூடாது; மொபைல்
போன் போன்ற
உபகரணங்களை எடுத்து வரக் கூடாது.
* வீட்டில் இருந்து பள்ளிக்கு தனியாக
வருவதை தவிர்த்து, குழுவாக
இணைந்து வரவேண்டும்.
* பள்ளிக்கு வரும் வழியில், நீர்நிலைகள்
இருந்தால், அதனருகில் செல்லக்
கூடாது.
* ரயில்வே பாதை,
நெடுஞ்சாலை இருப்பின் கவனமாக,
எச்சரிக்கையுடன் கடக்க வேண்டும். ரயில்,
பேருந்து படிக்கட்டில்
தொங்கியபடி பயணிக்க கூடாது.
* பள்ளிக்கு வரும் வழியில், அறிமுகம்
இல்லாத நபர்களிடம் பேசக் கூடாது;
அவர்கள் தரும்
உணவு பொருட்களை வாங்கக் கூடாது.
* பள்ளி நேரம் முடிந்த பின்
வீட்டிற்கு செல்ல வேண்டும். இந்த
அறிவுரைகளை,
பள்ளி தலைமை ஆசிரியர்கள்,
இறைவணக்க கூட்டத்தின் போது,
மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது .

No comments:

Post a Comment