Friday, March 13, 2015

உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்குவழங்கப்படுவதை தனிஊதியம் வழங்கிடக்கோரி வழக்கு

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க செயற்குழுக் கூட்டம் 12.03.2015 பிற்பகல் மதுரையில் மாநிலத் தலைவர் திரு. மு.அய்யாச்சாமி, அவர்கள் தலைமையில், கெளரவத் தலைவர் திரு. அ. சுந்தரராஜன், அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலர் திரு. சி. செளந்தரராஜன், அவர்கள் அனைவரையும்
வரவேற்று அறிக்கை வாசித்தார்.
மாநில பொருளர் திரு. அ. தம்பித்துரை,
மாநில துணை தலைவர் திரு. கு.
பால்ராஜ் அருள், மாநில துணைச் செயலர்
திரு. ஜோசப் அண்டோரெக்ஸ், மாநில
மகளிரணி திருமதி. ஈவ்லின் ஜெனட்,
மற்றும் 50 - க்கும் மேற்பட்ட உதவி தொடக்கக்
கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாநில மையம், விவாதம் மேற்கொண்டு,
பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.
1. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின்
தர ஊதியமான ரூ.4700 உதவி தொடக்கக்
கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதை
மாற்றி தனி ஊதியம் வழங்கிடக்
கோரி வழக்குத் தொடர்வது எனத்
தீர்மானிக்கப்பட்டது.
2. சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குட்பட்ட
சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம்,
நாமக்கல், கோவை, விழுப்புரம் மாவட்ட
உ.தொ.க. அலுவலர்கள் சார்பாக
சென்னையில் தனி வழக்குத்
தொடுப்பது எனத் தீர்மானிக்கப் பட்டது.
13.03.2015 அன்று மதுரை கிளையில்
வழக்குத் தொடர 42 உ.தொ.க. அலுவலர்கள்
கையொப்பமிட்டனர்.
இக்கூட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட பெண்
உ.தொ.க. அலுவலர்கள் உட்பட 50 க்கும்
மேற்பட்ட உ.தொ.க. அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
மேற்காண் அறிக்கை உதவி தொடக்கக்
கல்வி அலுவலர் சங்க மாநில
தலைமை நிலையச் செயலர் திரு. இரா.
கணேசன் அவர்களால்
வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment